‘கோமாளி' பட நடிகைக்கு கொரோனா தொற்று

Published By: Gayathri

21 May, 2021 | 03:24 PM
image

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற 'கோமாளி' படத்தில் நடித்த நடிகை சம்யுக்தா ஹெக்டேவிற்கு கொரனோ தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

'வாட்ச்மேன்' என்ற படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. 

அதனைத் தொடர்ந்து வெளியான 'கோமாளி' படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களிடம் பிரபலமானவர். இதைத்தொடர்ந்து 'பப்பி' என்ற படத்திலும் நடித்திருக்கும் இவர், தற்போது உருவாகிவரும் 'தேள்' என்ற படத்திலும் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவர். 

இவர் அண்மையில் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது... 

'நண்பர்களே.. நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். எனக்கு கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

மருத்துவர்களின் அறிவுரைப்படி நான் தற்போது தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். உங்களையும் கவனித்துக் கொள்ளுங்கள். அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட எனது பெற்றோர் நன்றாக குணமடைந்து வருகிறார்கள். அவர்கள் ஆரோக்கியத்துடன் திரும்பியதற்காக இந்தப் பிரபஞ்சத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.

கொரோனாத் தொற்றின் இரண்டாவது அலையில் திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரபலங்களும் என பலர் பாதிப்புக்குள்ளாகி வருகிறார்கள். தற்போது அந்தப் பட்டியலில் நடிகை சம்யுக்தா ஹெக்டேவும் இணைந்திருக்கிறார்.

இவரும் ஏனைய நடிகைகளைப் போல் விரைவில் இத்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வர வேண்டும் என்று அவரது இரசிகர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35
news-image

சுந்தர் சி யின் 'அரண்மனை 4'...

2024-04-15 17:04:05
news-image

'பென்ஸ்'| சவாரி செய்யும் ராகவா லோரன்ஸ்

2024-04-15 17:01:37
news-image

இயக்குநர் முத்தையாவின் ‘சுள்ளான் சேது’ ஃபர்ஸ்ட்...

2024-04-15 16:44:03