அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை   விமர்சிக்கும் அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

Published By: Digital Desk 4

21 May, 2021 | 06:43 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

அரசாங்கத்தின்  சுகாதார கொள்கைகளை விமர்சித்து, ஊடகங்களில்  பல்வேறு கருத்துக்களை வெளியிடுவது தாபன சட்டக் கோவையின் பிரகாரம்  குற்றம் எனவும் , அவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோருக்கு எதிராக இனி மேல் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சின் செயலர்  மேஜர் ஜெனரல் சஞ்ஜீவ முனசிங்க அறிவித்துள்ளார்.

Maj. Gen. Sanjeewa Munasinghe to be appointed Health Ministry's Secretary?

அனைத்து மாகாண சுகாதார செயலர்கள், சுகாதார அமைச்சின் கீழ் வரும் அனைத்து நிறுவங்களினதும் பிரதானிகள்,  அனைத்து மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்கள்,  பிரதேச சுகாதார பனிப்பாளர்கள் மற்றும் அனைத்து சுகாதார ஊழியர்களையும் விழித்து ' ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல்' எனும் தலைப்பில் அவர் அனுப்பியுள்ள அறிவித்தலிலேயே இந்த எச்சரிக்கையை அவர் விடுத்துள்ளார்.

அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சிப்பதன் ஊடாக சுகாதார அமைச்சு மற்றும் ஏனைய சுகாதார நிறுவங்கள் தொடர்பில் மக்களின் நம்பிக்கை இழக்கும் நிலை ஏர்படுவதாகவும் அதனை கருத்தில் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வரிவித்தலில் மேஜர் ஜெனரால் சஞ்ஜீவ முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இனி மேல் அரசாங்கத்தின் சுகாதார கொள்கைகளை விமர்சித்து கருத்து வெளியிடும் சுகாதாரத் துறை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு எதிராக தாபன விதிக் கோவையின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  அவர் எச்சரித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55