சர்வதேசம் இல்லையெனின் வடக்கில் தமிழ் மக்களின் வாழ்வாதாரம் இல்லை என்ற நிலையிலேயே கடந்த காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்தனர். சர்வதேசத்தை நம்பியே அவர்களின் வாழ்வாதாரமும் எதிர்பார்ப்புகளும் அமைந்தன என்பதை மறுக்க முடியாது எனவும் அரசாங்கம் தெரிவித்தது. ஆட்சிமாற்றம் நல்லிணக்கத்தை நோக்கிய விரைந்து பயணிக்கின்றது எனவும் குறிப்பிட்டது. 

அமைச்சரவை தீர்மானங்களை வெளிப்படுத்தும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க ஆகியோர் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.