முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இரகசியங்களை உரிய நேரத்தில் சரியான சந்தர்ப்பம் பார்த்து வெளியிடப்படும். என்னிடமும் பல இரகசியங்கள் உள்ளன. எப்போது மஹிந்த ராஜபக் ஷ தனித்து அரசியல் பயணத்தை ஆரம்பிப்பாரோ அப்போது வெளிப்படுத்துவோம்  என அமைச்சர் ராஜித சேனாரத்ன  தெரிவித்தார். அதேபோல் இந்த இரகசியங்கள் நிதி மோசடிகள் அல்லது ஊழல் மோசடிகள் என்று அர்த்தம் அல்ல. அதையும் தாண்டிய பல்வேறு விடயங்கள் உள்ளன. அரசியல் இரகசியங்கள் பல உள்ளன. அவற்றில் ஒன்றாகக் கூட இருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார். 

அமைச்சரவை தீர்மானங்களை வெளிப்படுத்தும் வாராந்த செய்தியாளர் சந்திப்பு இன்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதில் மஹிந்த ராஜபக் ஷ தொடர்பில் உள்ள இரகசியங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.