இணையத்தை கலக்கும் நிலவின் புகைப்படங்கள் 

Published By: Digital Desk 2

21 May, 2021 | 09:16 AM
image

இளம் வயது பிள்ளைகள் அதிகளவில் கேட்பது கையடக்கத்தொலைபேசி , மோட்டார் வண்டி மற்றும் நவீன விளையாட்டு பொருட்கள் தான்.

ஏன்னென்றால் அந்த பருவத்தில் அவர்கள் விரும்புவது அவற்றைத் தான்.

அந்தவகையில் புனேயை சேர்ந்த 16 வயதுடைய  பிரதமேஷ் ஜாஜு என்ற சிறுவன் சற்று வித்தியாசமாக வான்  பொருட்களை துல்லியமாக படம்பிடிக்க கூடிய தொலை நோக்கிகளையும்  கேமராக்களையும் விரும்பியுள்ளார். 


தன் விருப்பப்படியே அவற்றை பெற்ற  பிரதமேஷ் ஜாஜு  மே மாதம் 3ஆம் திகதி தீவிர தெளிவுடன் சந்திரனை புகைபடமெடுத்துள்ளார்.

இந்த அதீத வெற்றிக்கான 50,000 புகைப்படங்களை எடுப்பதற்கு தனக்கு 40 மணித்தியாலங்கள் செலவாகியதாக  பிரதமேஷ் கூறியுள்ளார்.

இதைப்பற்றி   பிரதமேஷ் மேலும் கூறுகையில்,

மே 3ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் நான் புகைபடமெடுக்க ஆரம்பித்தேன்.

சுமார் 4 மணித்தியாலத்திற்கு பல கோணங்களில் பலவகையான புகைபடங்களை எடுத்தேன்.

நான் எடுத்த 50,000 புகைப்படங்களுக்கு பின்னால் இருக்கும் ஒரே காரணம், நிலவில் தெளிவான புகைப்படத்தை எடுக்க வேண்டும்  என்பதேயாகும்.

இப்படி எடுக்கப்பட்ட புகைப்படங்களை  செயலாக்க 38 முதல் 40 மணி நேரம் ஆனது என தெரிவித்தார். 


 

பிரதமேஷின் புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. இந்த ஆய்வின் போது 186 GB சுமை தாளாமல் அவரது மடிக்கணினி செயலிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right