‘ஆன்டி இண்டியன்’ படத்திற்கு மறு தணிக்கையிலும் சிக்கல்

Published By: Gayathri

20 May, 2021 | 02:49 PM
image

திரையுலக வணிகரும், திரைப்பட விமர்சகருமான  'புளூ சட்டை' மாறன் முதன்முறையாக கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசையமைத்து, இயக்கியுள்ள ‘ஆன்டி இண்டியன்’ திரைப்படத்திற்கு மறு தணிக்கையிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

ஆன்டி இந்தியன் படத்தை கடந்த ஏப்ரல் மாதத்தில் பார்வையிட்ட தணிக்கைக் குழுவினர், படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர். 

அதன் பிறகு ரிவைசிங் கமிட்டி என்று சொல்லப்படும் மறு தணிக்கைக்கு இப்படம் அனுப்பப்பட்டது. 

பெங்களூரில் பிரபல இயக்குநர் நாகபரணா தலைமையிலான பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர். 

படம் பார்த்து முடித்த பிறகு படம் மிகவும் சிறப்பாக உள்ளதென ஒட்டுமொத்த குழுவினரும் பாராட்டினர். 

'இந்தப்படம் கண்டிப்பாக வெளியே வரவேண்டுமென்று நாங்கள் விரும்புகிறோம். அதேநேரம் நாங்கள் சொல்லும் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்க அல்லது மௌனிக்கச் செய்யவேண்டும். குறிப்பாக "ஆன்டி இண்டியன்" எனும் டைட்டிலை மாற்றிவிட்டு வேறு டைட்டில் வைக்க வேண்டும். நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்கவேண்டும். இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கேரக்டர் ஒன்றின் பெயர் 'ராஜா' என்று இருக்கிறது. அந்த பெயரையும் நீக்க வேண்டும்' என்று அக்குழுவினர் பத்து பேரும் ஒரே முடிவாக கூறினர். 'நாங்கள் தரும் 38 கட்டளைகளையும் ஏற்றுக்கொண்டு, படத்தில் அவற்றை எடிட் செய்து மறு தணிக்கைக்கு உட்பட்டால் U/A சான்றிதழ் தருகிறோம்' என்றனர்.

"உட்தா பஞ்சாப்", "பத்மாவதி" போன்ற ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிகப்படியான கட்களை வாங்கிய திரைப்படத்தின் பட்டியலில் ‘ஆன்டி இண்டியன்’ இடம்பெற்றது.  இந்நிலையில் ஆன்டி இண்டியன்’ படத்தை மேல் மறுதணிக்கைக்கு அனுப்ப படக்குழுவினர் தீர்மானித்துள்ளனர். 

அங்கே சாதகமான தீர்ப்பு வரும் எனும் நம்பிக்கை உள்ளதாகவும், இப்படம் எவ்வித சேதமும் இன்றி வெளியாக வேண்டுமென்பதே எங்கள் விருப்பம். அது நிச்சயம் நடக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியானது. மூன்று மதங்கள் மற்றும் சமகால அரசியலை மையமாகக் கொண்டு வெளியாகியுள்ள இந்த மோஷன் போஸ்டர் திரைப்பட இரசிகர்களின் மத்தியில் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டியுள்ளது. 

இதில் உள்ள குறியீடுகள் மற்றும் நையாண்டிகள் சர்ச்சையைக் கிளப்பும்படி உள்ளதாக சினிமா ஆர்வலர்கள் பலர் தெரிவித்தனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35