கர்ப்பிணிகளுக்கு கொரோனா தடுப்பூசியை வழங்க அனுமதியில்லை - விசேட வைத்திய நிபுணர் ஆனந்த

Published By: Digital Desk 2

20 May, 2021 | 11:30 AM
image

எம்.மனோசித்ரா

கர்ப்பிணிகளுக்கு கொவிட் தடுப்பூசியை வழங்க முடியும் என்று சில நாடுகள் பரிந்துரைத்துள்ளன. எனினும் இலங்கையில் இதுவரையில் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் பாலூட்டும் தாய்மாருக்கு தடுப்பூசி வழங்குவதில் எவ்வித சிக்கலும் கிடையாது. அவர்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முன்பும் , பெற்ற பின்னரும் பாலூட்டுவதை நிறுத்த வேண்டிய தேவையும் கிடையாது என்று தேசிய தொற்று நோய் ஆய்வகத்தின் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில், 

கொவிட் தொற்றால் ஏற்படுகின்ற பாதிப்புக்களையும் உயிரழிப்புக்களையும் குறைப்பதே தடுப்பூசி வழங்குவதன் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. தடுப்பூசியைப் பெற்றதன் பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தன் பின்னர் நபரொருவருக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகும்.

எனினும் தொற்று ஏற்படாது என்று கூற முடியாது. மாறாக தொற்று ஏற்பட்டாலும் அதன் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறைவாகும். எனவே தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டவர்களும் தமக்கு வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பிருக்கிறது என்று எண்ணி மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

ஏனையவர்களை விட கர்பிணிகளுக்கு தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகும். எனவே அவர்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். கர்பிணிகளுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குமாறு இதுவரையில் அறிவித்தல் வழங்கப்படவில்லை. தடுப்பூசிகள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட போது , அவற்றில் கர்பிணிகள் உள்ளடக்கப்படவில்லை என்பதே அதற்கான காரணியாகும்.

எனினும் சில நாடுகளில் கர்ப்பம் தரித்துள்ளதை அறியாமல் தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டுள்ள பெண்களுக்கு இதுவரையில் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சில நாடுகள் கர்பிணிகளுக்கு தடுப்பூசி வழங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளன.

எனவே இலங்கையிலும் துரிதமாக அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கின்றோம். இதே போன்று பாலூட்டும் தாய்மாருக்கு தடுப்பூசி வழங்குவதில் எவ்வித சிக்கலும் கிடையாது. தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ள முன்னரும் , பெற்ற பின்னரும் பாலூட்டுவதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50