அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் 6  நாட்களுக்கு மூடப்படும் - மஹிந்தானந்த

Published By: Digital Desk 2

20 May, 2021 | 11:11 AM
image

இராஜதுரை ஹஷான்

கொவிட் வைரஸ் தாக்கத்தினை கருத்திற் கொண்டு நாளை முதல் இரண்டு கட்டங்களாக நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்படும்.

ஆகவே நாளை முதல்  6 நாட்களுக்கு  நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்படும். கொவிட் -19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக பொருளாதார மத்திய நிலையங்கள் மூடியிருக்கும் தினங்களில் விவசாயிகள்  தங்களது உற்பத்திகளை  பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு வருவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.எனவே குறித்த தினங்களில் அறுவடைகளில் ஈடுபடாமல் இருப்பது சிறந்தது என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி பரிசோதனை நிலையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகயிலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் வார இறுதியில் பயணத்தடை விதிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு சட்டதிட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும்  தினங்களில் பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படாது.

எனவே குறைந்தது 2 அல்லது 3 நாட்களே மூடப்படும். அதனால் விவசாயிகளுக்கு எவ்வித நட்டமும் ஏற்படாத வகையில் எம்மால் வழங்கப்படும்  விதிமுறைகளுக்கு அமைய விவசாயிகள் தமது வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறும் தெரிவித்தார்.

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும்  நோக்கில் கடந்த வாரம் நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை விதிக்கப்பட்டது.

இதன் போது உற்பத்தியாளர்கள் அல்லது விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை பொருளாதார மத்திய நிலையங்களுக்கு கொண்டு வந்து அதனை விற்கமுடியாமல் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளாகியதுடன்  அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர்.

25 ஆம் திகதி காலை  4 மணிக்கு அனைத்து பொருளாதார  மத்திய நிலையங்களும், பெலியகொடை மீன் சந்தையும்  திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   

இரண்டாம் கட்ட பயணக்கட்டுப்பாட்டுக்கு அமைவாக  எதிர்வரும் 26 ஆம் திகதி  புதன்கிழமை முதல் 28 ஆம் திகதி  வரை நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் மூடப்படும்.

எனவே குறித்த காலப்பகுதியில்  விவசாயிகள் தமது உற்பத்தி பொருட்களை பொருளாதார மத்திய நிலையங்களுக்குக் கொண்டு செல்ல முடியாமல் போகும்.

எனவே இது குறித்து முன்னதாக அறிவித்தால் விவசாயிகள் தமது உற்பத்திகளை அறுவடை செய்யாமல் இருக்க முடியும். என்பதால் குறித்த காலப்பகுதிக்குள் மெனிங் சந்தை உள்ளிட்ட ஏனைய பொருளாதார மத்திய நிலையங்களை ஒருங்கிணைத்து வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாகவும் இதன்மூலம் விவசாயிகளுக்கோ நுகர்வோருக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56