தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு கோரிக்கை

Published By: Digital Desk 4

20 May, 2021 | 07:45 AM
image

தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர்களை பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும், மாவட்ட தலைவருமான ப.சத்தியலிங்கத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி 5 வட்டாரங்களையும், புளொட் இரண்டு வட்டாரங்களையும் வெற்றி பெற்றதுடன் போனஸ் ஆசனத்தை ரெலோ தனதாக்கியது.

இந்நிலையில், வவுனியா நகரசபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் 5 பேரில் இறம்பைக்குளம் வட்டார உறுப்பினர் செந்தில்ரூபன் கட்சி தாவிய நிலையில் அவர் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு கிறிஸ்தோபர் நியமிக்கப்பட்டிருந்தார். 

ஏனைய வட்டார உறுப்பினர்கள் 4 பேரும் தொடர்ந்தும் செயற்பட்டு வந்த நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிட்ட ஏனைய உறுப்பினர்களும் குறுகிய கால வாய்ப்பை வழங்கும் முகமாக வட்டார ரீதியாக வென்ற 4 உறுப்பினர்களையும் பதவி விலகுமாறு கட்சியின் செயலாளரும், வவுனியா மாவட்ட தலைவருமான முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்கள் கோரியுள்ளார். 

கட்சியின் மாவட்ட கிளையின் தீர்மானத்திற்கு அமைவாகவே இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகர வட்டார உறுப்பினர் ரி.கே.இராஜலிங்கம், பண்டாரிக்குளம் வட்டார உறுப்பினர் சுமந்திரன், குடியிருப்பு வட்டார உறுப்பினர் பரதலிங்கம், வைரவபுளியங்குளம் வட்டார உறுப்பினர் நா.சேனாதிராஜா ஆகியோரையே இவ்வாறு பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ளது. அவர்களது இடத்திற்கு கட்சிக்காக செயற்பட்ட புதிய உறுப்பினர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எனினும், தாம் வட்டார ரீதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் என்ற அடிப்படையில் சில உறுப்பினர்கள் பதவி விலக விருப்பமில்லாது இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22