12 ஆண்டுகள் கடந்தும் ஜனநாயகமும் சமாதானமும் நிலைநாட்டப்படாமல் இருப்பது கவலைக்குரியது: சுரேன் ராகவன்

Published By: J.G.Stephan

19 May, 2021 | 04:21 PM
image

(எம்.மனோசித்ரா)
முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்று 12 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், நாம் விரும்புகின்ற அளவிற்கு ஜனநாயகமும் சமாதானமும் நிலைநாட்டப்படாமல் இருப்பது கவலைக்குரியது. இலங்கையில் வாழும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்ற கூற்றின் அடிப்படையில் பூரண சுதந்திரத்துடன் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப நாடு முன்வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில்  ஊடகங்களுக்கு  காணொளியொன்றின் மூலம் அவர் மேலும் தெரிவித்ததாவது :

மே 18 ஆம் திகதி இலங்கை அரசியலுக்கு ஒரு முக்கிய நாளாகும். இந்நாள் வெறுமனே ஒரு பிரிவினைவாத மற்றும் பயங்கரவாத போரின் முடிவு மட்டுமல்லாமல் வட்டுக்கோட்டையில் தமிழர் செய்த பிரகடனம், அதாவது தமிழர் ஒரு தேசிய இனம். எனவே அவர்களுக்கு சுதந்திரமாக வாழக் கூடிய ஒரு தனி நாடின் உரிமை இருக்கிறது என்று கூறிய அந்த அரசியல் கூற்றின் நீண்ட 33 வருட பயணத்தின் முடிவாகவே மே 18 ஆம் திகதி காணப்படுகிறது.

போரின் வெற்றியோ, அரசியல் வெற்றியோ, தேர்தல் வெற்றியோ உண்மையான அர்த்தம் காண வேண்டுமெனில் அந்த வெற்றி பெற்றவர்கள் , மக்களின் அரசியல், பொருளாதாரம், கலாசாரம், சமூக சுதந்திரத்திற்கு இடம்கொடுத்து, புதியவொரு சமூக கட்டமைப்பை அமைப்பது தான் நியாயமானது.

எனினும் 12 வருடங்கள் கடந்தும் இலங்கையில் அந்தளவிற்கு நாம் விரும்புகின்ற அளவிற்கு ஜனநாயகமும் சமாதானமும் நிலைநாட்டப்படாமல் இருப்பது கவலைக்குரியது. எனவே தமிழ் தேசியவாதிகளான அரசியல்வாதிகளுக்கும் சிங்கள புத்திஜீவிகளுக்கும் நாம் ஒரு வேண்டுகோள் விடுகின்றோம்.

இலங்கையில் வாழும் தமிழர் , சிங்களவர் , முஸ்லிம்கள் மற்றும் ஏனைய சமூகங்கள் எல்லோரும் இலங்கையர்கள் என்ற கூற்றின் அடிப்படையில் பூரண சுதந்திரத்துடன் சம உரிமையுடன் வாழக்கூடிய ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப நாடு முன்வர வேண்டும் என்பதே அந்த வேண்டுகோளாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51