அம்பாறை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்தவரை நேற்று இரவு கைது செய்துள்ளதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

இது பற்றி மேலும் தெரியவருவதாவது, 

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடையவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மனைவின் தங்கையான 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஸஷ்பிரயோகம் மேற்கொண்டுள்ளதுடன் தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக உறவினர் பொலிஸாருக்கு முறைப்பாடு தெரிவித்தனர்.

இதனையடுத்து, கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில சிறுமியை கடத்திச் சென்று தலைமறைவாகியிருந்த இடத்தை சம்பவ தினமான நேற்று இரவு சுற்றிவளைத்து கடத்தியவரை கைது செய்ததுடன் சிறுமியை மீட்டு அக்கரைப்பற்று ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.