அரசாங்கத்தின் இயலாமை, பொறுப்பற்ற தன்மையே கொரோனா தொற்றாளர்கள் அதிகரிக்க காரணம் - அகிலவிராஜ் காரியவசம்

Published By: Digital Desk 3

19 May, 2021 | 11:22 AM
image

(எம்.மனோசித்ரா)

கொவிட் கட்டுப்படுத்தல் செயற்பாடுகளில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை. பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தியாவிலிருந்து 3,000 பயணிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டிருக்க மாட்டார்கள்.

அரசாங்கத்தின் இவ்வாறான பொறுபற்ற செயல்கள் காரணமாகவே இன்று வைத்தியசாலைகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது என்று ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் குற்றம் சுமத்தினார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

10 மில்லியன் கொவிட் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை கொள்வனவு செய்வதற்கு தனியார் துறையினர் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. அத்தோடு தடுப்பூசியை கொள்வனவு செய்து அரசாங்கத்துடன் இணைந்து அதனை மக்களுக்கு வழங்குவதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் அவை கூறின. ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

ஆனால் இன்று இதனை செய்ய முடியாமல் தோல்வியுற்று இப்போது தனியார் துறையிடம் கோரிக்கை விடுக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கொவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கை சனத்தொகையில் 20 வீதமானோருக்கு தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் சுகாதார அமைச்சர் கூறிய இந்த விடயம் உண்மைக்கு புறம்பானவை என்பது எமக்குத் தெரியும். பாராளுமன்றத்தில் இவ்வாறு கூறியதன் பின்னர்  2021 ஜனவரி மாதத்திலேயே அவர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். உரிய நேரத்தில் அரசாங்கம் இதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை.

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசியை வழங்க தீர்மானித்தால் இரு தடவைகள் வழங்குவதற்கு இலங்கைக்கு 30 மில்லியன் தடுப்பூசிகள் தேவையாகவுள்ளது. ஆனால் இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி 10 மில்லியன் மாத்திரமே தேவை என்று கூறுகின்றார்.

அவ்வாறெனில் எஞ்சிய 20 மில்லியன் தடுப்பூசிகளை கொள்வனவு செய்யப் போவதில்லையா? எனவே இதுவரையில் எவ்வளவு தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

அவை எப்போது நாட்டுக்கு கிடைக்கப் பெறும் ? எஞ்சிய தொகையை பெற்றுக் கொள்ள என்ன செய்வது ? உள்ளிட்டவை தொடர்பில் அரசாங்கம் தெளிவாகக் கூற வேண்டும். நாட்டு மக்கள் அபாயமான நிலையிலுள்ளனர். பெப்ரவரியில் 18,000 பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் ஏப்ரல் மாதமளவில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் கொவிட் பரவல் குறைவடைந்துள்ளதாக மக்கள் எண்ணினார்கள். சுகாதார தரப்பினர் கூறியதைப் போன்று போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்காமையினால் இன்று இந்த நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.

அரசாங்கம் இது தொடர்பில் பொறுப்புடன் செயற்படவில்லை. உண்மையில் பொறுப்புடன் செயற்பட்டிருந்தால் இந்தியாவிலிருந்து விமானம் மூலமாக 3000 பயணிகள் அழைத்து வரப்பட்டிருக்கமாட்டார்கள்.

அதே போன்று உக்ரேன் பிரஜைகளும் நாட்டுக்கு வந்திருக்க மாட்டார்கள். இன்று வைத்தியசாலைகளில் கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளமை அரசாங்கம் பதில் கூற வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21