சர்வதேச விசாரணையாளர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்: லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: J.G.Stephan

18 May, 2021 | 08:07 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)
ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணையாளர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு விசாரணை மேற்கொள்ளாமல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என எதிர்க்கட்சி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், ஏப்ரல் தாக்குதல்  சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய போதுமான சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் தெரிவித்திருக்கின்றார். முறையான சட்சியம் இல்லாமல் வழக்குதொடுக்கமுடியாது. ஏப்ரல் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கும் தேவையான சாட்சியங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. 

ஏப்ரல் தாக்குதல் தொடர்பான பிரதான சாட்சியம்தான் சஹ்ரானுக்கு யார் சம்பளம் வழங்கியது என்பதாகும். 2010க்கும் 2015க்கும் இடைப்பட்ட காலத்திலேயே சம்பளம் வழங்கப்பட்டிருக்கின்றது. சரத் பொன்சேகா இராணுவ தளபதியாக இருக்கும் போது சஹ்ரானிடமிருந்து எந்த உதவியையும் பெற்றுக்கொள்ளவில்லை என தெரிவித்திருக்கின்றார். சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய விடயம் தொடர்பான சாட்சியம் ஆணைக்குழுவுக்கு வழங்கினால் அரசாங்கத்தின் உண்மை வெளிப்படும் என்ற காரணத்தினாலே அதனை வெளிப்படுத்தவில்லை.

அத்துடன் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளுக்கும்  எமது குற்றப்புலனாய்வு பிரிவுக்கும் தொடர்பு இருக்கின்றது. குற்றப்புலனாய்வு அதிகாரியான நிலந்த ஜயவர்த்தன அன்று அவருக்கு கிடைத்த தகவல்களை அப்போதைய ஜனாதிபதிக்கு தெரிவிக்கவில்லை என்பது ஆணைக்குழு சாட்சியத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றது. தொடர்பு இருந்ததாலே தகவல்களை தெரிவிக்காமல் இருந்திருக்கின்றது.

அதனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள சர்வதேச விசாரணை அதிகாரிகளுக்கு  ஒப்படைக்கவேண்டும்.  அமெரிக்காவின் எப்.பி.ஐ., ஸ்கொட்லாந்து விசாரணை அதிகாரிகளை அழைத்து இந்த விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் ஏப்ரல் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-03-19 17:03:35
news-image

பொலிஸாருக்கு எதிராக இரு யுவதிகள் தாக்கல்...

2024-03-19 17:05:31
news-image

தேர்தலுக்கு பணம் திரட்டுவதற்காக அரசாங்கம் 2...

2024-03-19 16:45:00
news-image

நெடுங்கேணியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

2024-03-19 16:49:55
news-image

கோப் குழுவிலிருந்து மரிக்கார் இராஜினாமா!

2024-03-19 16:40:26
news-image

யாழ். பல்கலை முன்றலில் போராட்டம்

2024-03-19 16:32:24
news-image

லிந்துலையில் வர்த்தக நிலையம் உடைத்து கொள்ளை

2024-03-19 16:18:54
news-image

கோப் குழுவிலிருந்து சரித ஹேரத் இராஜினாமா!

2024-03-19 15:59:04
news-image

“ குபுகட பச்சயன்” குற்றக் கும்பலை...

2024-03-19 16:00:44
news-image

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 16:00:14
news-image

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முழுநாள் வேலைநிறுத்தம்!

2024-03-19 16:06:01
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30