இலங்கை அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நேற்று (23) ஆர். பிரேமதாச மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார்.

அவருக்கு இவ்வருடம் விளையாட முடியாது என்றாலும் அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வருட ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடச் சென்ற மலிங்கவை கிரிக்கெட் சபை இலங்கைக்கு அழைத்திருந்தது.

இதன்படி மருத்துவ பரிசோதனையின் பின்னர் இந்த வருடத்தில் எந்த போட்டிகளிலும் பங்கேற்க கூடாது என ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் அடுத்து இடம்பெறவுள்ள தென்னாபிரிக்கா அணிக்கெதிரான போட்டியிலும் மலிங்க பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.