கொவிட் தாக்கத்தினால் பாராளுமன்ற செயற்பாடுகள் ஒருபோதும் தடைப்படாது - பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்

Published By: Digital Desk 3

18 May, 2021 | 03:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் -19  வைரஸ் தாக்கத்தினால் பாராளுமன்ற செயற்பாடுகள் ஒருபோதும் தடைபடாது. கொழும்பு துறைமுக நகர சட்ட மூலம் தொடர்பில் உயர்நீதிமன்றின் தீர்மானம் நாளை வெளிப்படுத்தப்படும். விவாதத்துடன் சட்டமூலம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தவும், அதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களையும் வெற்றிக்கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

கொவிட் வைரஸ் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் தற்போதைய நிலையின் காரணமாக தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இம்மாத இறுதியில்  ஒரு இலட்சத்து 85,000 ஸ்புட்னிக் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்தினால் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் பிற்போட முடியாது. பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம்  தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் சபாநாயகருக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.

அத்தீர்மானம் இன்று பாராளுமன்றில் அறிவிக்கப்படும். துறைமுக ஆணைக்கு தொடர்பில் நாளையும், நாளை மறுதினமும் இரு நாள் விவாதத்தை முன்னெடுக்க பாராளுமன்ற குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

துறைமுக நகர சட்டமூலத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம்.

முழுமையான இரு நாள் விவாதத்தை தொடர்ந்து   துறைமுக நகர சட்டமூலம் வியாழக்கிழமை மாலை பெரும்பான்மையான ஆதரவுடன் நிறைவேற்றப்படும்.  பொருளாதாரத்தை விரைவாக முன்னேற்ற துறைமுக நகரம் பாரிய பங்களிப்பு வழங்கும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04