கொரோனா தொற்றாளர்களை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதில் தாமதம் : இராணுவத்தளபதிக்கு அவசர கடிதம்

Published By: Digital Desk 2

18 May, 2021 | 12:22 PM
image

எம்.மனோசித்ரா

நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்ற நிலையில் , தொற்றாளர்களை துரிதமாக வைத்தியசாலைகளில் அனுமதிக்க வேண்டியதன் தேவை குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.

எனினும் தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் வைத்தியசாலைகளில் அல்லது இடைநிலை பராமரிப்பு நிலையங்களில் அனுமதிக்கப்படுவது கால தாமதமாவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

எனவே இது தொடர்பில் அவதானம் செலுத்துமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் ஆணைக்குழு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளது.

அத்தோடு தொற்றாளர்கள் வைத்தியசாலைக்கு அல்லது இடைநிலை பராமரிப்பு நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முன்னறிவிப்புக்கள் சிலவற்றையும் மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது.

அதற்கமைய தொற்று உறுதிப்படுத்தப்படுபவர்கள் எந்த வைத்தியசாலைக்கு அல்லது சிகிச்சை நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படப் போகிறார்கள் என்பதை அறிவித்தல் , இவ்வாறு அழைத்துச் செல்லும் போது அவர்கள் கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள் தொடர்பில் அறிவுறுத்துதல் , அழைத்துச் செல்ல முன்னர் அதற்கு ஆயத்தமாவதற்கான கால அவகாசத்தை வழங்குதல் என்பவை தொடர்பில் கவனத்தில் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும் , தொற்றாளர்களின் உறவினர்கள் தகவல்களைத் தெரிந்து கொள்வதற்காக அவர்களுக்கான பொதுவான தொலைபேசி இலக்கமொன்றை வழங்குதல் , தொற்றுக்கு உள்ளான ஒரு நபர் ஏற்கனவே வேறொரு தொற்றா நோயால் அல்லது ஏதேனுமொரு நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளவரெனில் அவரை அழைத்துச் செல்ல முன்னர் அவரது நோய்க்கான மருந்துகளை எடுத்துக் கொண்டாரா  என்பது தொடர்பில் அறிந்து கொள்ளல் என்பவற்றினை மேற்கொள்ளுமாறும் அந்த கடிதத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தொற்றாளர்கள் தமது அன்றாட செயற்பாடுகளை தனியாக செய்து கொள்ள முடியாதவர்களாவோ அல்லது குழந்தைகளாகவோ காணப்பட்டால் அவர்களுக்கான மாற்று வேலைத்திட்டமொன்றும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தொற்றுக்கு உள்ளானால் அவர்கள் அனைவரையும் ஒரே சிகிச்சை நிலையத்திற்கு அழைத்து செல்ல முயற்சிக்க வேண்டும்.

தொற்றாளர்களின் இருப்பிடங்களுக்கு அருகிலுள்ள சிகிச்சை நிலையங்களில் அல்லது வைத்தியசாலைகளில் அவர்களை அனுமதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும் தொற்று உறுதிப்படுத்தப்படும் குழந்தைகளை தாயிடமிருந்து தனிமைப்படுத்தமாலிருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39