3 ஆவது வருடக் கூட்டாண்மையுடன் இலங்கை புற்றுநோய்ச் சங்கத்திற்கு ஆதரவை வழங்கிவரும் AIA இன்ஷுரன்ஸ்

Published By: Gayathri

18 May, 2021 | 12:20 PM
image

இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்துடனான 2021 இற்கான தனது தொடர்ச்சியான மூன்றாவது வருடக் கூட்டாண்மையின் புதுப்பித்தலை AIA ஸ்ரீலங்கா அறிவித்திருந்தது. 

இவ்வருடத்தில் விற்கப்படுகின்ற ஒவ்வொரு புதிய காப்புறுதி சார்பாகவும் ரூபா.100 இனை இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்திற்கு AIA தொடர்ச்சியாக நன்கொடையாக வழங்கும்.

இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி மற்றும் புற்றுநோய்ச் சங்கத்தின் தலைவர் நிஹால் ரொட்ரிகோ ஆகியோருக்கிடையில் கைச்சாத்திடப்பட்டிருந்தது.

AIAகுழுமத்தின் நூற்றாண்டு வருடக் கொண்டாட்டத்தினைக் கௌரவிக்கும் விதமாக 2019 இல் புற்றுநோய்ச் சங்கத்தினை AIA தொடர்பு கொண்டிருந்தது. 

இதன் நிமித்தமாக அவ்வருடத்தில் விற்கப்படும் ஒவ்வொரு புதிய காப்புறுதித் திட்டத்திற்கும் ரூபா.100 இனை வழங்குவதாக AIA இனால் சங்கத்திற்கு வாக்குறுதியளிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MOU) விளைவாக வருட இறுதியில் கிட்டத்தட்ட ரூபா 5 மில்லியன் நிதியினை AIA நன்கொடையாகவும் வழங்கியிருந்தது. 

கடந்த வருடம் கொவிட் பெருந்தொற்றுக் காணப்பட்டிருந்த போதிலும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது (MOU) 2020 இல் புதுப்பிக்கப்பட்டிருந்ததுடன், மீண்டும் 2021 இலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை கடந்த வருடத்தின போது ரூபா 4.7 மில்லியன் நிதியினை AIA சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கி தனது வாக்குறுதியினை உறுதிப்படுத்தி நிறைவேற்றியுமிருந்தது.

இவ்வாறு நன்கொடையாக வழங்கப்படும் நிதியானது மிகவும் ஏழ்மையான புற்றுநோயாளிகளின் துயராற்றும் மற்றும் ஆரோக்கியப் பராமரிப்பு வழங்கல் நடவடிக்கைகளுக்காகவும், இலங்கையில் துரிதமாக அதிகரித்துவரும் கவலைக்குரிய விடயமாகக் காணப்படும் புற்றுநோய், அதனது சிகிச்சை மற்றும் தடுப்பு விழிப்புணர்வு போன்றவற்றை அதிகரிக்கும் பொருட்டும் இலங்கைப் புற்றுநோய்ச் சங்கத்தினால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

AIA இன் பிரதான நிறைவேற்று அதிகாரி நிகில் அத்வானி இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், 

'குளோபல் பேங்கிக் மற்றும் பைனான்ஸ் ரிவியு (Global Banking and Finance Review) இதழினால் 2019 மற்றும் 2020 இல் இலங்கையின் மிகச்சிறந்த ஆயுள் காப்புறுதி வழங்குநராக AIA தெரிவு செய்யப்பட்டுள்ள காரணத்தினால் இலங்கையர்களின் வாழ்க்கையில் தெளிவான மற்றும் உறுதியான வேறுபாடு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் நாங்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம். 

மேலும், மக்கள் நீண்ட ஆயுளுடன் கூடிய, ஆரோக்கியமான சிறந்த வாழ்க்கையை வாழ்வதற்கு உதவி செய்வதற்கான எங்களுடைய வாக்குறுதிக்கும் நாங்கள் மிகவும் முன்னுரிமையளிக்கின்றோம். அந்த வாக்குறுதியினை மக்களுடைய ஆயுளைப் பாதுகாப்பதற்காகப் பயன்படுத்துவதில் சமூக சேவையும் மிகவும் பாரிய பங்கு வகிக்கின்றது.

தற்போது புற்றுநோய் போன்ற தொற்றாத நோய்கள் இலங்கையில் பாரிய பிரச்சினையாகவே காணப்படுகின்றன. அதாவது இலங்கையில், உலகளாவிய 63% இனையும் விட அதிகரித்த 80% மான மரணங்களுக்குப் பொறுப்பானதாகவே இவை காணப்படுகின்றன. 

தற்போது நாட்டின் முதன்மையாக சுகாதாரப் பிரச்சினைகளில் ஒன்றாகப் புற்றுநோயும் காணப்படுகின்றது. மேலும் புற்றுநோய்க்கு விசேடத்துவமான சிகிச்சை முறைகளும், இதற்கு மேலதிகமாக நோயாளர்களுக்கு அர்ப்பணிப்பு மிக்க பராமரிப்பும், அவர்களின் குடும்பங்களுக்கான ஆதரவுப் பொறிமுறை அமைப்பொன்றும் நிச்சயமாகத் தேவைப்படுகின்றது. 

இது தொடர்பாக இலங்கைப் புற்றுநோய்ச் சங்கம் முன்னெடுக்கும் சிறப்பான பணிகளை நாங்கள் உண்மையில் மிகவும் பாராட்டுகின்றோம். மேலும் இந்த உயிர்கொல்லி நோய்க்கு எதிரான போராட்டத்தில் உடல், உள மற்றும் நிதியியல் ரீதியாக எங்களாலும் உதவ முடியுமாக இருப்பதை நாங்கள் அறிகின்றபோது அது எங்களுடைய அனைத்து ஊழியர்கள், வெல்த் பிளேனர்கள் மற்றும் பங்காளர்களுக்கு ஒரு பாரிய அர்த்தமுள்ளதொரு விடயமாகவே அமைகின்றது' என அவர் மேலும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

புற்றுநோய்ச் சங்கத்தின் தலைவர் நிஹால் ரொட்ரிகோ AIA இன் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்துக் கருத்துக் கூறுகையில், 

'உறுதியான கூட்டாண்மையின் அடையாளமானது எது நடந்தாலும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதாகும். AIA மிகவும் பாதகமான பெருந்தொற்றுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும் நிச்சயமாக இத்தருணத்தில் எங்களுடன் ஒன்றாகவே கைகோர்த்து எங்களுக்கு மிகவும் ஆதரவளித்திருந்தது. 

கொவிட் பெருந்தொற்றுக் காலத்தின்போது மிகவும் நெருக்கடியான நிதியியல் சவால்கள் இருந்த போதிலும் AIA எங்களுக்கு வழங்கியிருந்த நிதியியல் உதவிக்கான வாக்குறுதியைத் தொடர்ச்சியாக வழங்கியிருந்தமைக்காக நாங்கள் மிகவும் நன்றிகளையும், பாராட்டையும் AIA இற்கு தெரிவித்துக் கொள்கின்றோம். 

மிகவும் கடினமான அத்தருணத்தின்போது வறுமையான புற்றுநோயாளர்களுக்குச் சிகிச்சையளிப்பதற்காகவும் மற்றும் எங்களுடைய வைத்தியசாலையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவும் இந்த நிதியானது எங்களுக்கு மிகப்பெரியளவில் உதவியாகவே அமைந்திருந்தது. 

தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாகவும் இக்கூட்டாண்மை புதுப்பிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். AIA இன் தொடர்ச்சியான உதவிகள் மற்றும் உறுதுணையுடன் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்துவதற்கு நாங்கள் தொடர்ந்தும் AIA இன் ஆதரவினை மிகவும் எதிர்பார்த்திருக்கின்றோம்' எனக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

'தேசியப் புற்றுநோய் நிறுவனத்தின் அபெக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சையினை வேண்டி நிற்கும் ஏழ்மையான நோயாளிகளுக்குத் தற்காலிகமான தங்குமிட மற்றும் சுகாதாரப் பராமரிப்பு வசதிகளை வழங்குகின்ற 32 படுக்கைகளுடனான மருத்துவப் பராமரிப்பு மற்றும் ஆறுதலளித்தல் வசதியினைக் கொண்ட 'சாந்தா செவன' மற்றும் 'பண்டாரநாயக்க மெமோரியல் ஹோம்ஸ்' ஆகியவற்றின் செயற்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை முன்னெடுப்பதற்கு AIA நிறுவனத்தினால் பாரியளவில் பங்களிப்புச் செய்யப்பட்ட நிதியினையே நாங்கள் பயன்படுத்துகின்றோம். 

நோயாளிகள் மருத்துவ, மற்றும் உள ரீதியாக இரு வழியிலும் மிகச்சிறந்த ஆரோக்கியப் பராமரிப்பு மற்றும் உதவிகள் பெறுவதை உறுதிப்படுத்துவதற்கான அனைத்துச் சாத்தியமான விடயங்களை மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் மிகவும் வலி நிறைந்த சிகிச்சைக்குள்ளாகும் நோயாளர்களுக்கு நேரடியான பராமரிப்பை வழங்குவதற்காகவும் நாங்கள் வெளி நிறுவனங்களின் உதவிகளிலும் மிகவும் சார்ந்திருக்கின்றோம். 

எங்களுடைய நோக்கத்திற்கு உதவி செய்வதற்கு முன்வந்து தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வரும் AIA நிறுவனத்தை நாங்கள் மிகவும் பாராட்டுவதோடு இந்த முக்கியமான விடயத்திற்காக அவர்களுக்கு நாங்கள் மேலும் நன்றிகளைத் தெரிவிக்கின்றோம்' என அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58