ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத்துறையை தங்கி வாழ்ந்த மக்களுக்கு 3 கோடி நிதி ஒதுக்கீடு

Published By: Digital Desk 2

18 May, 2021 | 12:19 PM
image

கொவிட்-19 வைரஸ் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள சுற்றுலாத்துறையை பின்னணியாக கொண்ட குடும்பங்களை கருத்தில் கொண்டு அந்த மக்களின் மேம்பாடுகளுக்காக 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சிங்ஹா அறிவித்துள்ளார். 

இதனடிப்படையில் பதிவுசெய்யப்பட்ட 4 ஆயிரத்து 444 படகு சேவை உரிமையாளர்கள் , ஆயிரத்து 370 சுற்றுலா வழிக்காட்டிகள், 6 ஆயிரத்து 663 குதிரை சவாரி உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையை தங்கியுள்ள ஏனைய 2 ஆயிரத்து 150 பேருக்குமாக தலா 2 ஆயிரம் ரூபாவும் வீதம் நிதி உதவி வழங்கப்படவுள்ளது. 

இந்த நிதி உதவிகள் சுற்றுலாத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கே வழங்கப்படவுள்ளதாக ஆளுநர் அலுவலம் அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் இது மிகவும் வரையறுக்கப்பட்ட சலுகையாக சுற்றுலாத்துறையில் உள்ளவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இந்த சலுகைகள் எதுவும் பயண முகவர்கள் , காஷ்மீரில் புகழ்பெற்ற படகு இல்லம் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள்,போக்குவரத்து கட்டுப்பாட்டளர்களுக்கு வழங்கப்படவில்லை. 

மேலும் இந்த சலுகைகள் சுற்றுலாத்துறை உட்கட்டமைப்பிற்கான மின்சார மற்றும் நீர் கட்டண சலுகைகளுக்கும் உள்ளடக்கப்பட வேண்டும் என காஷ்மீரின்  பயண முகவர்கள் சங்கத்தின் உறுப்பினர் டாக்டர் உமர் நசீர்திபெத் பாகால் தெரிவித்தார். 

ஜம்மு - காஷ்மீர் சுற்றுலாத்துறை கடந்த இரு ஆண்டுகாலமாக படுமோசமாக பாதித்துள்ளது.  ஆகஸ்ட் மாதம் ஜம்மு - காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து முடிவிலிருந்து இந்த பாதிப்பு காணப்படுகின்றது. ஆனால் கடந்த ஆண்டு இந்த நிலை மாறி சுற்றுலாத்துறை மேம்படும் என்று எதிர்பார்த்த போதிலும் கொவிட் வைரஸ் தாக்கம் அதற்கு வாய்ப்பளிக்கவில்லை. 

ஆனால் 2021 ஆண்டு ஆரம்பத்தில் இந்த நிலைமை சற்று ஆரோக்கியமானதாகியுள்ளது. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் மார்ச் மாதம் 25 ஆம் திகதி டால் ஏரியின் கரையில் அமைந்துள்ள துலிப் கார்டனை அரசாங்கம் திறந்தது.  ஆனால் தற்போதுள்ள கொவிட் வைரசின் இரண்டாம் அலை தாக்கத்தினால் இங்கு பல பதிவகள் இரத்து செய்யப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் எதிர்வரும் நவம்பர் சுற்றுலா பருவத்தை எதிர்பார்க்கப்படுகின்றது. மறுப்புறம் இங்கு சுற்றுலாத்துறையை மேம்படுத்த அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35