வெலே சுதாவை சிறைச்சாலைக்கு வெளியே அழைத்துச் செல்ல தடை !

Published By: Digital Desk 4

17 May, 2021 | 10:33 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

பிரபல போதைப்பொருள் கடத்தற்காரரான ‘வெலே சுதா’ எனப்படும் கம்பொல விதானகே சமந்த குமாரவை  பூசா சிறைச்சாலைக்கு வெளியில் அழைத்துச் செல்வதற்கு  தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம்  இன்று உத்தரவு பிறப்பித்தது. 

மேன் முறையீட்டு நீதிமன்றின்  தலைமை நீதிபதி அர்ஜுன் ஒபேசேகர தலைமையிலான நீதிபதி பிரியந்த பெர்ணான்டோ அடங்கிய இருவர் கொண்ட  நீதிபதிகள் குழாம் இந்த இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்தது.

 

போதைப் பொருள் வர்த்தக குற்றச்சாட்டில் மரண  தண்டனை விதிக்கப்பட்டு, தற்போது பூசா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள  தனது மகனை, விசாரணை எனும் பெயரில் வெளியே அழைத்து சென்று கொலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கூறி  வெலே சுதாவின் தாய் ஆர். ஜி. மாலனி ரிட் மனுவொன்றினை இன்று மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்தார்.

 

தற்போது பூசா சிறையில் உள்ள வெலே சுதாவை, மீள பொலிஸ் பொறுப்பில் எடுக்க தடை விதிக்கக் கோரி அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 அண்மையில்  பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்ட கொஸ்கொட தாரக, ஊரு ஜுவா ஆகியோர்  பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவங்களை முன் வைத்து அவர் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

 குறித்த மனுவில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், பூசா சிறைச்சாலை அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தனர்.

 குறித்த மனு இன்று  அவசர மனுவாக கருதி பரிசீலிக்கப்பட்டது. இதன்போது மனுதாரர்  சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி  ரொமேஷ் டி சில்வா மன்றில் ஆஜரானார்.

தற்போது பொலிஸார், விசாரணை எனும் பெயரில்  சந்தேக நபர்களை வெளியே அழைத்து சென்று கொலை செய்யும் நிலை ஒன்றினை அவதனிக்க முடிவதாகவும், அந்த நிலைமை தனது மகனுக்கும் ஏற்படுமோ என மனுதாரர் அஞ்சுவதாக  ஜனாதிபதி சட்டத்தரனி ரொமேஷ் டி சில்வா சூட்டிக்காட்டடினார்.

அதன்படியே  வெலே சுதாவை, பொலிஸ் பொறுப்பில் எடுக்க இடைக்கால தடை விதிக்க அவர் கோரினார்.

 எனினும் இதன்போது மன்றில்  கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி அர்ஜுன ஒபேசேகர,  இடைக்கால தடை தொடர்பில் பிரதிவாதிகளுக்கும் கருத்து முன் வைக்க சந்தர்ப்பம் அளிப்கப்படல் வேண்டும் என குறிப்பிட்டார். எனவே பிரதிவாதிகளுக்கு அறிவித்தல் அனுப்ப மனுதாரர் தர்ப்புக்கு உத்தர்விட்டார்.

 அத்துடன் மனு மீதான பரிசீலனைகளை எதிர்வரும் 24 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானித்த நீதிமன்றம், அது வரை வெலே சுதாவை பூசா சிறைக்கு வெளியே அழைத்து செல்லக் கூடாது என பூசா சிறைச்சாலையின் அத்தியட்சருக்கு கட்டளையிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02