கொரோனாவிடம் அடைந்த தோல்வி

Published By: Digital Desk 2

17 May, 2021 | 08:01 PM
image

சத்ரியன்

அரசாங்கத்தின் அலட்சியம் மற்றும் பிடிவாதப் போக்கும், நாட்டு மக்களின் அலட்சியமும், இன்று மோசமான நிலைக்குள் நாட்டை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. இந்த இடத்தில் வெற்றி பெற்றிருப்பது கொரோனாவா, அரசாங்கத்தின் பிடிவாதமா?

 கொரோனா தொற்று நாட்டில் இதுவரையில்லாத பேரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னர், நாளாந்த கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 250 தொடக்கம் 300 இற்குள் தான் காணப்பட்டது. அந்த எண்ணிக்கை கடந்தவாரம், 2500 ஐ தாண்டியிருக்கிறது. உயிரிழப்பும், 20 தொடக்கம் 30 வரை தினமும் பதிவாகின்ற நிலை இப்போது உருவாகியிருக்கிறது.

இந்தநிலை முன்கூட்டியே எதிர்பாராத ஒன்று அல்ல.  இலங்கையில் கொரோனாவின் முதலாவது அலையும், இரண்டாவது அலையும் எதிர்பார்க்கப்பட்டவை அல்ல. முதல் அலை போதிய முன்னேற்பாடுகளுக்கு மத்தியில், தீவிரமான முடக்க நிலை, ஊரடங்கினால் கட்டுப்படுத்தப்பட்டது. இரண்டாவது அலையும், கிட்டத்தட்ட அவ்வாறு தான் அடக்கப்பட்டது.

ஆனால் மூன்றாவது அலை, இந்தளவுக்கு மோசமானதாக இருக்கும் என்று, அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம், பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் மாத்திரமன்றி சுகாதார திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கூட கணித்திருந்தனர். அவர்கள் தமது கணிப்பை மூடி மறைக்காமல், பலமுறை வெளிப்படுத்தியிருந்தனர். அதனால் தான், சித்திரைப் புத்தாண்டு காலத்தில் நாட்டை முடக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் போக்குவரத்து கட்டுப்பாடுகளையாவது விதிக்க வேண்டும் என்றும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், "கெடு குடி சொற் கேளாது" என்ற பழமொழியை நினைவுபடுத்தும் வகையில் தான், அரசாங்கம் நடந்து கொண்டது. ஊரடங்கு விதிக்கப்படாது, முடக்க நிலை அறிவிக்கப்படாது என்று திட்டவட்டமாக கூறியதுடன், பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் மறுத்தது அரசாங்கம். சித்திரைப் புத்தாண்டுக் காலத்தை, கொரோனா தொற்று நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை சீரழிக்கத் தொடங்கி விட்டது.

இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2021-05-16#page-4

இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04