சிரேஷ்ட பிரஜைகளுக்கு பிரத்தியேகமான அனுகூலங்களை வழங்கும் வகையில் “செலான் ஹரசர” கணக்க்கு புதிய அம்சங்களுடன் மீள அறிமுகம் 

Published By: Digital Desk 3

17 May, 2021 | 04:29 PM
image

அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, சிரேஷ்ட பிரஜைகளுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் விசேட அனுகூலங்கள் மற்றும் நிதியியல் தீர்வுகளை வழங்கும் கணக்கான “செலான் ஹரசர” கணக்கை புதிய அம்சங்களுடன் மீள அறிமுகம் செய்யதுள்ளது.

சிரேஷ்ட பிரஜைகளுக்கு காணப்பட வேண்டிய நிதிச் சுதந்திரம் மற்றும் உறுதித் தன்மையை புரிந்து கொண்டு சமூகத்தில் அவர்கள் ஆற்றும் முக்கியமான பங்களிப்பை கவனத்தில் கொண்டும், செலான் வங்கி தனது ஹரசர கணக்கை பல பெறுமதி சேர்க்கப்பட்ட அம்சங்கள் மற்றும் சேவைகளுடன் மீள அறிமுகம் செய்துள்ளது. செலான் ஹரசர என்பது ஒரு சாதாரண சேமிப்புக் கணக்கைவிட சிறந்ததாகவும், நபர் ஒருவர் ஓய்வு பெறும் வயதை எய்தியதும், நிதிச் சுதந்திரத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவச் செலவுகள் பெருமளவில் அதிகரித்துக் காணப்படுகின்றன. இது பல சிரேஷ்ட பிரஜைகளுக்கு பெரும் சுமையாக அமைந்துள்ளது. செலான் ஹரசர சிரேஷ்ட பிரஜைகள் கணக்கினூடாக, அவர்களுக்கு ஏற்படும் பொதுச் சத்திர சிகிச்சைகளுக்கான ரூ. 200,000 வரையான செலவை மீளப் பெற முடியும் என்பதுடன், வில்லைகள் மற்றும் விழிவெண்படல சீராக்க சத்திரசிகிச்சைக்கான சாதனங்களுக்கு ஏற்படும் செலவுகளை மீளப் பெற முடியும். மேலும், இலவசமாக வருடாந்த மருத்துவ வெகுமதிகளையும் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். செலான் ஹாரசார டெபிட் அட்டையினூடாக கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, தெரிவு செய்யப்பட்ட வைத்தியசாலைகள் மற்றும் மருத்துவ ஆய்வுகூடங்களில் 20 சதவீதம் வரை, மூக்குக் கண்ணாடி விற்பனை நிலையங்களிலிருந்து 25 சதவீதம் வரை, புத்தக விற்பனை நிலையங்களிலிருந்து 15 சதவீதம் மற்றும் ஒன்லைன் பார்மசிகளில் 10 சதவீதம் வரை பிரத்தியேகமான விலைக்கழிவுகளைப் பெற்றுக் கொள்ள முடியும். ஹாரசார கணக்குதாரர்களுக்கு நாடு முழுவதையும் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களிலிருந்து கவர்ச்சிகரமான விலைக்கழிவுகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்படி சலுகைகளுக்கு மேலதிகமாக, ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ. 5 மில்லியன் வரை விசேட வட்டி வீதங்களில் ஓய்வூதியக் கடன்களுக்கு விண்ணப்பிக்க முடியும். தமது ஓய்வூதியத்தை செலான் வங்கிக்கு மாற்றும் வாடிக்கையாளர்களுக்கு அன்பளிப்பாக ரூ.5000 வரை பாவனைக் கட்டணப்பட்டியல் கொடுப்பனவுகளுக்கான மீளளிப்புகளும் வழங்கப்படும். ஹாரசார கணக்குதாரர்கள் தமது 60 வயது பூர்த்தியை கொண்டாடும் போது செலான் வங்கியிடமிருந்து விசேட வெகுமதியையும் பெற்றுக் கொள்வார்கள்.

அன்புடன் அரவணைக்கும் வங்கியான செலான் வங்கி, எதிர்காலத் தலைமுறையினரை தயார்ப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்த சிரேஷ்ட பிரஜைகளை சமூகத்தில் முக்கிய அங்கத்தவர்களாக கவனத்தில் கொண்டுள்ளது. அவர்களின் கடுமையான உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கு தமது நன்றியைத் தெரிவிக்கும் வகையில், செலான் வங்கியின் அணியினால் விசேட திட்டமொன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனூடாக சிரேஷ்ட பிரஜைகளுக்கு தமது ஓய்வு காலத்தை நிறைவாகவும், நிதிச் சுதந்திரத்துடனும் நிம்மதியாக அனுபவித்து மகிழும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செலான் வங்கியின் வைப்புகள் முகாமைத்துவ தலைமை அதிகாரி திமுத் சிகேரா கருத்துத் தெரிவிக்கையில், “ஏனைய சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்புக் கணக்குகளுடன் ஒப்பிடுகையில் செலான் ஹரசர கணக்கினூடாக வழங்கப்படும் பெருமளவான பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளின் காரணமாக சிறப்பானதாக அமைந்துள்ளது.” என்றார்.  

எமது சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த குழுவினருக்காக, செலான் வங்கி 24/7 நேரமும் இயங்கும் ஹொட்லைன் இலக்கமொன்றை நிறுவியுள்ளதுடன், சகல கிளைகளிலும் முன்னுரிமை அடிப்படையிலான வங்கிச் சேவைப் பகுதிகளையும் நிறுவியுள்ளது. மேலும் நட்பான சேவை கிளை ஊழியர்களினூடாக, சகல வாடிக்கையாளர் தேவைகளின் மீதும் கவனம் செலுத்தப்படும். மேலதிக தகவல்களுக்கு www. seylan.lk  எனும் இணையத்தளத்தை பார்க்கவும்.

அன்புடன் அரவணைக்கும் வங்கி, செலான் வங்கி, அதிநவீன தொழில்நுட்பம், புதுமையான தயாரிப்புகள் மற்றும் வகுப்பில் சிறந்த சேவைகள் மூலம் அதன் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு உன்னத வங்கி அனுபவத்தை வழங்குவதற்கான தொலைநோக்குடன் செயல்படுகிறது. சிறிய மற்றும் நடுத்தர, சில்லறை மற்றும் நிறுவனங்கள் என வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வங்கி, 172 கிளைகள் மற்றும் 216 ATMகள் கொண்ட வலையமைப்புடன் அதன் கால்தடத்தை விரிவுபடுத்தியுள்ளது.

பிற்ச் மதிப்பீடுகளால் செலான் வங்கி, தேசிய நீண்டகால மதிப்பீட்டை ‘A (LKA)’ என ஒப்புதல் அளித்து, செயல்திறன் சிறப்பைக் கொண்ட நிதி ரீதியாக நிலையான அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி குளோபல் நிறுவனத்தால் நிறுவன அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மைக்காக பொது பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், செலான் வங்கி இரண்டாவது இடத்தைப் பிடித்தது, மேலும் வங்கிக்கு 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்துடன்ன வங்கியியல் சேவை வழங்குநர் எனும் விருது LMD இனால் வழங்கப்பட்டிருந்தது. இந்த சாதனைகள் செலான் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை மற்றும் அனைத்து அம்சங்களிலும் சிறந்து விளங்குவதற்கான உறுதியான அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58