கொம்பேங்க் விசா டெபிட் அட்டைகளுக்கு அனுப்பப்படும் பணத்திற்கு பூஜ்ஜிய கட்டணங்களை வழங்க மணிகிராம் விசாவுடன் இணைகிறது

Published By: Gayathri

17 May, 2021 | 04:01 PM
image

அமெரிக்காவிலிருந்து மணிகிராம் பணப்பரிமாற்றல் சேவையினூடாக வங்கியால் தமக்கு வழங்கப்பட்ட விசா டெபிட் அட்டைக்கு பணத்தைப் பெறும் கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களிடம், இம் மூன்று நிறுவனங்களும் இணைந்து முன்னெடுக்கும் ஊக்குவிப்பு பிரசாரத்தின் காரணமாக எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. 

இந்த இணைப்பு ஊக்குவிப்பு பிரசாரத்தின் கீழ், கொமர்ஷல் வங்கி விசா டெபிட் அட்டைதாரர்களுக்கு அமெரிக்காவிலிருந்து பணம் அனுப்புவோரிடம் பணம் அனுப்புவதற்கான கட்டணத்தை மணிகிராம் தள்ளுபடி செய்கின்றது.  

மேலும், அட்டையின் சான்றாவணங்களைப் பயன்படுத்தி  பாதுகாப்பான, வசதியான மற்றும் நிகழ்நேர நிதி விநியோகத்துக்கு உதவும் ‘விசா டிரக்ட்’ திட்டத்தின் ஊடாக நிதிக் கணக்குகளுக்கு நேரடியாக அனுப்பப்படும் பரிவர்த்தனைகள் இதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்ளும். 

இந்த ஊக்குவிப்பு பிரசாரத்தின் மூலம், கொமர்ஷல் வங்கியின் விசா டெபிட் அட்டைதாரர்கள் தங்கள் பணத்தை விசா டிரக்டின் பாதுகாப்பான வலையமைப்பின் மூலம் விரைவாகப் பெற முடியுமென்பதுடன், இது $ 0  கட்டண சலுகைக்கு மேலதிகமாக வலுவான ஆபத்து மற்றும் மோசடி நிர்வாகத்தை உறுதி செய்கிறது என்று வங்கி தெரிவித்துள்ளது.

ஒரு முன்னணி பண பரிமாற்ற நிறுவனமாக உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட மணிகிராமின் முக்கிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் உலகளாவிய பண பரிமாற்றங்கள், காசு கட்டளைகள், நிதி நிறுவனங்கள் மற்றும் சில்லறை வாடிக்கையாளர்களுக்கான கொடுப்பனவு செயற்படுத்தல் தீர்வுகள் ஆகியவை அடங்கும்.

உலகின் முதல் 1,000 வங்கிகள் என்ற பட்டியலில் இடம்பிடித்த இலங்கையைச் சேர்ந்த முதலாவது வங்கியாகவும் அப்பட்டியலில் தொடர்ச்சியாக 10 ஆண்டுகள் இடம்பிடித்த இலங்கையின் ஒரே வங்கியாகவும் விளங்கும் கொமர்ஷல் வங்கி, இலங்கையில் 268 கிளைகளையும் 932 தானியங்கி வங்கி இயந்திரங்களையும் (ஏ.டி.எம்) கொண்ட வலையமைப்பைக் கொண்டுள்ளது.

வங்கியின் வெளிநாட்டுச் செயற்பாடுகள், 19 கிளைகளைக் கொண்டுள்ள பங்களாதேஷை உள்ளடக்குகின்றன. 

அதேபோல், மியான்மாரின் நேய்பியுடோவில் நுண் நிதி நிறுவனமொன்றையும், மாலைதீவில் முழுமையான செயற்பாடுகளைக் கொண்ட முதல் வரிசை வங்கியொன்றை பெரும்பான்மைப் பங்குரிமையோடு வங்கி கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58