கொழும்புபில் 8 இடங்களில் கொவிட் தடுப்பூசி - நாளையும் இடம்பெறும்

Published By: Digital Desk 4

17 May, 2021 | 03:59 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை கொழும்பு மாநகர அதிகார பிரதேசத்தில் 8 இடங்களில் இடம்பெற்றுவருகின்றது. நாளைய தினமும் இடம்பெறுகின்றது என கொழும்பு மாநகர சபை தொற்று நோய் தொடர்பான வைத்தியர் தினுகா குருகே தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபை பிரதேசத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொ்டர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,

கொழும்பு மாநகர அதிகார பிரத்தேசத்தில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை 8 இடங்களில் இடம்பெற்று வருகின்றன. அதில் மக்கள் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்று தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளும் 5 இடங்கள் செயற்படுகின்றன.

அதேபோன்று ஒன்லைன் ஈசெனல் ஊடாக முன் கூட்டியே அனுமதி பெற்று தடுப்பூசி ஏற்றும் 3 இடங்கள் செயற்பட்டு வருகின்றன.

இவ்வாறு தடுப்பூசி ஏற்றும் மத்திய நிலையங்கள் மட்டக்குளி, பொரளை, முகலன் வீதி, வெள்ளவத்தை ரோக்சி பிரதேசத்தில் அமைந்துள்ளன.

இன்றைய தினம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இந்த இடங்களில் இடம்பெற்றதுபோல் இன்றைய தினமும் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை குறிப்பிட்ட இடங்களில் அவ்வாறே இடம்பெற ஏற்பாடு செய்திருக்கின்றோம் என்றார்.

இதேவேளை, அஸ்ட்ரா செனிகா முதலாம் கட்ட தடுப்பூசி ஏற்றிய 9 இலட்சித்தி 25ஆயிரத்தி 242பேரில், இதுவரை 2 இலட்சத்தி 67ஆயிரத்தி 77பேருக்கு அதன் இரண்டாம் கட்ட தடுப்பூசி ஏற்றியிருப்பதுடன் சைனோபாம் முதலாம் கட்ட தடுப்பூசி இதுவரை 3இலட்சித்தி 75ஆயிரத்தி 316பேருக்கு ஏற்றியிருப்பதாக சுகாதார அமைச்சின் ஊடக பேச்சாளர் வைத்தியர் ஹேமன்த ஹேரத் தெரிவித்தார்.

மேலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் அஸ்ட்ரா செனிகா இரண்டாம் கட்ட தடுப்பூசி ஆயிரத்தி 612பேருக்கு ஏற்றியிருப்பதுடன் சைனோபாம் முதலாம் கட்ட தடுப்பூசி 26ஆயிரத்தி 697பேருக்கு ஏற்றி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46