நாட்டில் இடம்பெற்ற கடந்த யுத்த காலத்தின் போது இடம்பெயர்ந்து தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியைச் சேர்ந்த 23 பேர் இன்று காலை மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் இதுவரை காலமும் தமிழ்நாட்டு அகதி முகாம்களில் தங்கியிருந்துள்ளனர்.

அவர்களை சொந்த இடங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.