நுவரெலியாவில் இன்று தனிமைப்படுத்தப்பட்ட சில பகுதிகள்

Published By: Gayathri

17 May, 2021 | 01:04 PM
image

நுவரெலியா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவு பகுதிகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

அட்டன் பகுதியில் ஒன்றும், நோர்வூட் பகுதியில் மூன்றும், பொகவந்தலாவை பகுதியில் ஐந்தும் ஆகிய பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைக்கு அமையவே இவ்வாறு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி பொகவந்தலாவை பொலிஸ் பகுதியில் கெர்க்கஸ்வோல்ட், பொகவான, லொய்னோன், கொட்டியாகல, பொகவந்தலாவை ஆகிய கிராம சேவகர் பகுதிகளும், நோர்வூட் பொலிஸ் பகுதியில் வெஞ்சர், இன்ஜஸ்ட்ரி, டிலரி ஆகிய கிராம சேவகர் பகுதிகளும், அட்டன் பொலிஸ் பகுதியில் என்பீல்ட் கிராம சேவகர் பகுதியும் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அந்த பகுதிக்குள் உட்பிரவேசிக்கவும் அங்கிருந்து வெளிச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அமுலாகியுள்ள பயணத்தடை மீள் அறிவிக்கும் வரை அமுலில் இருக்கும் என நுவரெலியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அங்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08