அமோனியம் நைட்ரேட்டுடன் சென்ற ரயில் விபத்து ; வெளியேறல் உத்தரவும் பிறப்பிப்பு

Published By: Vishnu

17 May, 2021 | 08:42 AM
image

அமெரிக்காவின் வடமேற்கு அயோவா நகரமான சிபிலியில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ரயிலொன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியது.

இதனால் ரயிலில் இருந்த 47 கார்கள் தீப் பிடித்து எரிந்ததுடன், அதிகாரிகள் குறித்த பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர்.

டெஸ் மொயினுக்கு வடமேற்கில் சுமார் 200 மைல் தொலைவில் சுமார் 3,000 பேர் வசிக்கும் நகரமான சிபிலியின் தென்மேற்கு ஞாயிற்றுக்கிழமை அந் நாட்டு நேரப்படி பிற்பகல் 2.00 மணியளவில் இச் சம்பவம் ஏற்பட்டுள்ளது.

விபத்தனால் உண்டான காயங்கள் அல்லது இறப்புகள் குறித்து எந்த அறிக்கையும் இல்லை என்று அயோவா உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அவசரநிலை மேலாண்மைத் துறையின் செய்தித் தொடர்பாளர் லூசிண்டா பார்க்கர் தெரிவித்தார். 

ரயில் எங்கு சென்றது அல்லது மொத்தம் எத்தனை கார்கள் இருந்தன என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஒஸ்ஸியோலா கவுண்டி வாரிய மேற்பார்வையாளர்களின் உறுப்பினரான மைக் ஷுல்ட் மற்றும் திருமதி டைஸ்வர் ஆகியோர் ரயில் தடம் புரண்டபோது என்னென்ன  பொருட்கள் ரயிலில் இருந்தன என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறினார்.

சிபிலியில் உள்ள தீயணைப்புத் துறைத் தலைவர் கென் ஹல்ஸ், ரயிலில் வெடிபொருட்களில் பயன்படுத்தக்கூடிய அமோனியம் நைட்ரேட்டை ஏற்றிச் சென்றதாகவும், டீசல் எரிபொருளுடன் கலந்த அமோனியம் நைட்ரேட் மிகவும் வெடிக்கும் அச்சுறுத்தலை கொண்டதாகவும் கூறினார்.

இந்த கலவை சுரங்கத் தொழிலில் வெடிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது 1995 இல் ஓக்லஹோமா நகர குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்டது, இது 169 பேரைக் கொன்றது மற்றும் 467 பேர் காயமடைந்தனர்.

இந்த அச்சுறுத்தல்களின் பின்னணியிலேயே குறித்த பகுதியை அண்மித்து வசிக்கும் மக்களை வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சியோக்ஸ் நகரத்திற்கு வடக்கே 80 மைல் தொலைவில் உள்ள சிபிலி மக்கள் தொகை சுமார் 2,700 ஆகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10