காசாவில் ஒரே நாளில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டம்; 42 பேர் பலி, பலர் காயம்

Published By: Vishnu

17 May, 2021 | 07:47 AM
image

யுத்த நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுடனான மோதல் சீற்றமடையும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதனால் காசாவில் இஸ்ரேல் குண்டுவீச்சு தொடர்ச்சியாக எட்டாவது நாளில் நுழைந்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காசா நகரில் இஸ்ரேலிய படையினர் முன்னெடுத்த தாக்குதல்களில் மூன்று கட்டிடங்கள் தரை மட்டமாகியது. 42 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

காயமடைந்த பாலஸ்தீனியர்கள் ரஃபா எல்லையைத் தாண்டி எகிப்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாக பாலஸ்தீனிய மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

ஒரு வாரத்திற்கு முன்னர் சமீபத்திய வன்முறை தொடங்கியதில் இருந்து காசா பகுதியில் 58 சிறுவர்கள் மற்றும் 34 பெண்கள் உட்பட குறைந்தது 192 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் சார்பில் இரு சிறுவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வன்முறை குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் ஞாயிற்றுக்கிழமை கூடியது, ஆனால் ஒரு கூட்டு அறிக்கையை அது ஏற்கத் தவறிவிட்டது.

யுத்த நிறுத்தத்தை நிறுத்தி வைப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவின் ஹமாஸ் ஆட்சியாளர்களுடனான மோதல் சீற்றமடையும் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

சனிக்கிழமை இஸ்ரேல் குண்டு வீசிய கட்டிடத்திற்குள் ஹமாஸ் இராணுவ உளவுத்துறை செயல்பட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். இந்த கட்டிடம் சர்வதேச ஊடகங்களான அசோசியேட்டட் பிரஸ் மற்றும் அல் ஜசீரா அலுவலகங்களை கொண்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35