துறைமுக நகர சட்ட மூலத்தில் திருத்தங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்  - எதிர்க்கட்சி வலியுறுத்தல்

Published By: Digital Desk 4

16 May, 2021 | 11:06 PM
image

(எம்.மனோசித்ரா)

கொழும்பு துறைமுக நகர பொருளாதார சட்ட மூலம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி சில திருத்தங்களை தயாரித்துள்ளது.

அவற்றை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு , குறித்த சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாயின் வாக்கெடுப்பு தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாடசாலைகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் இன்மையே, மாணவர் வரவு குறைவிற்றுக்  காரணம்: லக்ஷ்மன் கிரியெல்ல | Virakesari.lk

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிறுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

கொவிட் நிலைமையைக் கருத்திற் கொண்டு துறைமுகநகர சட்ட மூலம் மீதான விவாதத்தை ஒரு வாரமேனும் ஒத்திவைக்குமாறு ஆளுந்தரப்பிடம் கோரினோம்.

எனினும் அந்த கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. தற்போது அவசரமாக 19 , 20 ஆம் திகதிகளில் விவாதத்தை நடத்த தீர்மானித்துள்ளனர்.

இந்த சட்ட மூலத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டிய பல உறுப்புரைகள் உள்ளன. அவ்வாறு முன்னெடுக்கக் கூடிய திருத்தங்களை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துள்ளது.

இதனை அரசாங்கத்திடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளோம். எம்மால் முன்வைக்கப்படும் திருத்தங்களை ஏற்றுக் கொண்டு சட்டமூலத்தில் அந்த திருத்தங்களை அரசாங்கம் ஏற்படுத்துமாயின் வாக்கெடுப்பு தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டத்தில் அவதானம் செலுத்துவோம்.

ஆனால் இந்த அரசாங்கம் எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள திருத்தங்களை ஏற்றுக் கொள்ளும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. எனவே இதனை பாராளுமன்றத்தின் அதிகாரத்திற்குள் உட்படுத்துமாறு வலியுறுத்துகின்றோம். 

அத்தோடு துறைமுகநகர நிதி விவகாரங்கள் தொடர்பில் விசாரிக்கும் அதிகாரம் கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

மத்திய வங்கி பிணை முறி மோசடி மற்றும் சீனி இறக்குமதி வரி மோசடி என்பன இவற்றின் மூலமாகவே பகிரங்கப்படுத்தப்பட்டன. எனவே துறைமுகநகரும் பாராளுமன்ற அதிகாரத்திற்கு உட்படுத்தப்பட்டால் அதில் இடம்பெறும் மோசடிகளையும் தடுக்க முடியும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58