அவசரப்பட வேண்டாம்  : அரசாங்கம் 

Published By: MD.Lucias

23 Aug, 2016 | 07:22 PM
image

(ஆர்.யசி)

பாதிக்கப்பட்ட மக்களுக்காகவே காணாமால் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.  இதில் பதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கப்படுவது என்ற குற்றச்சாட்டை ஒருபோதும் ஏற்றுகொள்ள முடியாது.  இது தொடர்பான பொறிமுறைகள் சரியான பலமடையும் வரையில் எவரும் அவசரப்பட வேண்டாம். இந்த ஆட்சியில் உண்மைகள் கண்டறியப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டது. 

காணாமால் போனோர்  அலுவலக   சட்டமூல உருவாக்கத்தில் மக்களின் கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக நல்லிணக்க செயலணி தனது அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளது.    இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்.

நாம் உண்மைகளை  கண்டறியும் பொறிமுறைகளை பலமாக முன்னெடுத்து வருகின்றோம். மனித உரிமைகளை  பலப்படுத்துவது மிகமுக்கியமான காரணியாகும். அதேபோல் இதில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தையும் தாண்டி காணாமல் போனோர்  தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோர் தொடர்பில் ஆராயும் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் செயற்பாடுகள் இன்னும் பூரணப்படுத்தப்படவில்லை.  இந்த அமைப்பு எவ்வாறு செயற்படும், அதன் வரைபுகள்  மற்றும் அங்கத்தவர்கள் தொடர்பில் இன்னும் இறுதித் தீர்மானம் ஒன்று எடுக்கப்படவில்லை. அவ்வாறு இருக்கையில் இதன் செயற்பாடுகள்  தொடர்பிலான  விமர்சனங்களை எம்மால் ஏற்றுகொள்ள முடியாது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57