வீரகேசரி பதிப்புரிமையின் கீழ், ஊடகவியலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் எழுதிய நல்லூர் கந்தசுவாமி பெருங்கோயில் என்ற நூல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்  இன்று கையளிக்கப்பட்டது.

நல்லூர் கோவிலை பற்றி முழுமையான தகவல்களுடன் ஆறு அத்தியாயங்களாகப் பகுக்கப்பட்டுள்ள இந்த நூலின் பிரதியை ஆசிரியரும் ஊடகவியலாளருமான உமா சந்திரா பிரகாஷ் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று ஜனாதிபதியிடம் வழங்கினார்.

நல்லூர் கோவிலின் ஆதிவரலாறும் புராதன ஆலயங்களும் நாற்றிசைக் கோவில்களும் , இன்றைய ஆலயம்,உருவாக்கமும் அதன் பிரமாண்ட வளர்ச்சியும், நித்திய பூசைகள், வருடாந்த மகோற்சவம், பஞ்சாங்க முறைப்படியான சிறப்பு நாட்கள், முருகனுக்கும் பக்தனுக்கும் இடையிலான தனித்துவமான உலகம் என ஆறு பகுப்புக்களை கொண்டு இந்த நூல் வெளியிடப்பட்டுள்ளது.

நல்லூர் கோவிலின் கொடியேற்ற தினத்தன்று (08.08.2016) நூல் முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டதோடு அதன் பிரதி நூலாசிரியரால் ஆலய நிர்வாகத்தரான குமாரதாச மாப்பாண முதலியாரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.