நாட்டிற்கு வருகை தந்துள்ள அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் துணை செயலாளர் தோமஸ் ஷெனன் இன்று எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

அமெரிக்க இலங்கைக்கு இடையிலான நல்லுறவை பேணும் வகையில் திருகோணமலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வின் போதே இருவரும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்டின் பெர்னாண்டோ கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அகமட் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஏ.புஸ்பகுமார உட்டப பலர் கலந்து கொண்டனர்.