சாட்சியங்களை மறைப்பதற்காக பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கொல்லப்படுகின்றனரா ? - புபுது ஜயகொட கேள்வி

Published By: Digital Desk 2

15 May, 2021 | 05:39 PM
image

நா.தனுஜா

பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் முக்கியமாக இயங்கும் அரசியல்வாதிகள், வர்த்தகர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் தொடர்பான சாட்சியங்களை மறைப்பதற்காக பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் கொல்லப்படுகின்றனரா, என்று முன்னிலை சோசலிஸக்கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று முன்தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

அண்மையில் பொலிஸ் பாதுகாப்பிலிருந்த பாதாள உலகக்குழுவைச்சேர்ந்த 'உரு ஜுவா' என்றழைக்கப்படும் மெலோன் மாபுல மற்றும் 'கொஸ்கொட தாரக' என்றழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர ஆகியோர் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

உரு ஜுவா கொலை செய்யப்படலாம் என்று ஏற்கனவே அவருடைய தாயார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்திருக்கிறார். அதேபோன்று கொஸ்கொட தாரக கொலை செய்யப்படலாம் என்று அவரது சட்டத்தரணியினால் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது.



அதேபோன்று இவ்விருவரும் கொல்லப்படலாம் என்று முன்னரேயே சமூகவலைத்தளங்களிலும் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும் இச்சம்பவம் தொடர்பான விபரங்களை பொலிஸார் இன்னும் வெளியிடவில்லை. ஆரம்பத்தில் இதுபோன்ற சம்பவங்களின் போது, சந்தேக நபர் தம்மைத் தாக்க முற்பட்டதாகவும் தற்பாதுகாப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தியதில் சந்தேகநபர் உயிரிழந்ததாகவும் பொலிஸார் கூறுவதுண்டு. எனினும் இப்போது அந்தக் கதையையும் அவர்கள் கூறவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் ஒவ்வொரு தரப்பினரும் பல்வேறு கருத்துக்களையும் விமர்சனங்களையும் வெளியிட்டு வருகின்றனர். பாதாள உலகக்குழு செயற்பாடுகள் மிகவும் மோசமானவை என்பதுடன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவையாகும். ஆனால் சில சமயங்களில் சில தேவைகளுக்காக எதிரிகளை உருவாக்கவேண்டிய தேவை காணப்படுகின்றதல்லவா?

உதாரணத்திற்கு முன்னர் அனைத்து விடயங்களுக்கும் விடுதலைப்புலிகளே எதிரிகளாக சித்தரிக்கப்பட்டனர். அதன்பின்னர் புதிய எதிரியாக இஸ்லாமிய அடிப்படைவாதம் காண்பிக்கப்பட்டது. பின்னர் அரச சார்பற்ற அமைப்புக்களும் எதிரிகளாக்கப்பட்டன. எனவே தற்போது அரசாங்கம் ஏனைய விடயங்களில் அடைந்திருக்கும் தோல்வியை மறைப்பதற்காகவே பாதாள உலகக்குழுக்கள் தொடர்பில் பேசுபொருளை உருவாக்குகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. அத்தோடு கொரோனா வைரஸ் பரவலினால் மக்கள் அச்சத்திற்குள்ளாகியிருக்கும் சந்தர்ப்பத்தில், சட்டவிரோதமான நடவடிக்கைகளை அரசாங்கம் சாதாரணமாக முன்னெடுப்பதற்கு முயற்சிக்கின்றதா என்ற கேள்வியும் ஏற்படுகின்றது.

இவ்வாறு பாதாளக்குழு உறுப்பினர்களைக் கொல்வதற்குக் காரணம் பாதாள உலகக்குழு செயற்பாடுகளை முடிவிற்குக் கொண்டுவருவதா? அல்லது பாதாள உலகக்குழுக்களில் முக்கிய நபர்களைப் பாதுகாப்பதற்கா? என்று கேட்கின்றோம். பாதாள உலகக்குழு செயற்பாடுகளில் முக்கியமாக இயங்கும் அரசியல்வாதிகள், வர்த்தகர்களின் அடையாளங்கள் மற்றும் அவர்கள் தொடர்பான சாட்சியங்களை மறைப்பதற்காக இத்தகைய கொலைகள் இடம்பெறுகின்றனவா? 

இத்தகைய சம்பவங்கள் மூலம் பாதாள உலகக்குழுக்கள் இல்லாது போய், அதை விடவும் மோசமான பாதாள உலகக்குழு உருவாகும். அது அரசாங்கத்தின் ஆதரவையும் மக்களின் வரிப்பணத்தில் கொள்வனவு செய்த ஆயுதங்களையும் கொண்டிருக்கும். இத்தகைய புதிய பாதாளக்குழுக்கள் உருவாகுவதற்கு இடமளிக்க முடியாது என்று குறிப்பிட்டார். 














  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36