காலிஸ்தான் ஜிந்தாபாத் படைத்தலைமை 'நீட்டா' பற்றி பாகிஸ்தான் மறைப்பது ஏன்?

Published By: J.G.Stephan

15 May, 2021 | 09:22 AM
image

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களுக்காக தனி நிலத்தினைப் பெற்றுக்கொடுப்பதற்காக  போராடும் காலிஸ்தான் ஜிந்தாபாத் படையின் தலைவர் ரஞ்சீத் சிங் நீட்டா இந்த ஆண்டு பெப்ரவரியில் பாகிஸ்தான் அதிகாரிகளால் கொல்லப்பட்டதாக உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. 

இருப்பினும், பாகிஸ்தானில் உள்ள எந்த ஊடகமும் இந்த விடயத்தினைப் பற்றி செய்திகளை வெளியிட்டிருக்கவில்லை. பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஆதரவைப் பெற்று வரும் சீக்கிய போராளிகளிடமிருந்து பின்னடைவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தான் இந்த செய்தியை அரசாங்கம் இருட்டடிப்புச் செய்துள்ளது. 

அதேநேரம் காலிஸ்தானியர்களை அகற்ற பாகிஸ்தான் அரசாங்கம் திட்டமிட்ட மூலோபாய முயற்சியில் இரண்டாவதாக பாதிக்கப்பட்டவராக இருப்பவர் தான் ரஞ்சீத் சிங் நீட்டா என்றும் குறிப்பிடப்படுகின்றது. 

இந்நிலையில், 'காலிஸ்தான் இயக்கத்தால் இனி பயனில்லை. இந்தியாவுக்கு எதிராக அந்த இயக்கத்தினரை ஒன்றிணைக்க முடியும் என்ற  நம்பிக்கையில் தான் அரசாங்கம் அந்த இயகத்தினருக்கு ஆதரவளித்தது. ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை. இப்போது அந்த இயக்கம் நாட்டிற்கு கெட்ட பெயரை மட்டுமே தருகிறது. எனவே, அதனை அகற்றுவதற்கு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.' என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சின் மூத்த செயலாளர் நிலை அதிகாரி ஒருவர் கூறினார்.

கடந்த ஆண்டு ஜனவரியில், லாகூரில் குருத்வாரா அருகே பாகிஸ்தான் ஆயுதப்படைகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காலிஸ்தான் விடுதலைப் படையின் (கே.எல்.எப்) தலைவரான மற்றொரு ஹர்மீத் சிங் கொல்லப்பட்டார். ஐ.எஸ்.ஐ அமைப்பானது, அவரை காலிஸ்தான் இயக்கத்தை புதுப்பிக்கவும், பஞ்சாபில் இந்து இன அழிப்பை மேற்கொள்ளவும் பயன்படுத்தியது. எனினும், 'ஹர்மீத் சிங் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு ஒரு பொறுப்பாகிவிட்டார். அதனால் அவரை அகற்ற வேண்டியிருந்தது' என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி கூறினார்.

ஹர்மீத் சிங் தனது கூட்டாளிகளில் ஒருவரின் உறவினராக இருந்த முஸ்லிம் பெண்ணுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார். அதேநேரம் அவர் ஐ.எஸ்.ஐ உடனும் நெருங்கிய உறவைக் கொண்டிருந்ததால், அவர்களிடமிருந்து உதவிகளையும் அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கான  'சிவப்புக் கோட்டை'  அதாவது ‘எல்லையைக்’ கடந்துவிட்டார்.  சீக்கியரான ஹர்மீத் ஒரு முஸ்லிம் பெண்ணுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தமையானது, ஹர்மீத் முஸ்லிம் கொள்கையில் இணைந்து செல்ல விரும்புகின்றார் என்று ஐ.எஸ்.ஐ தீர்மானித்துக் கொண்டது. அதன் பின்ரே அவர் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டது. 

ஹர்மீத் சிங்கைப் போலவே, ரஞ்சீத் சிங்கும் இந்தியாவில் பல பயங்கரவாத வழக்குகளில் தேடப்படுபவராக இருக்கின்றார். 1990களின் முற்பகுதியில் ஜம்முவில் உள்ள குருத்வாரா சாஹேப்பில் வெடிகுண்டு வைக்க முயன்றமைக்காக அவர் கைது செய்யப்பட்டார்.

1993இல் அவர் மகாராஷ்டிரா பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் 1995 இல் பொலிஸ் காவலில் இருந்து அவது தப்பினார். பின்னர் அவர் 1996 இல் நேபாளம் வழியாக பாகிஸ்தானுக்குச் சென்றார். பின்னர் பாகிஸ்தானில் தங்கியிருந்து செயற்பட்டு வந்தார்.

ஜீலம் எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்புகள், பதான்கோட்டில் வீதிப்பேருந்துகளில் குண்டு வெடிப்புக்கள், ஷாலிமார் எக்ஸ்பிரஸ், பூஜா எக்ஸ்பிரஸ், சியால்டா எக்ஸ்பிரஸ் ஆகியவற்றின் குண்டு வெடிப்புக்கள் மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளில் பல குண்டு வெடிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களுக்கு ரஞ்சீத் சிங் பங்குதாராக இருந்தார் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. 

பொதிவிநியோகம் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்தியாவிற்குள் எல்லை தாண்டி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள், மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை கடத்திய குற்றச்சாட்டுக்களுடன் இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பின் பட்டியலிலும் ரஞ்சீத் சிங் காணப்பட்டார். 

அதேநேரம், ரஞ்சீத் சிங், ஹர்மீத் சிங்குடன் நெருக்கமாக பணியாற்றியிருந்தார். அவர் பாகிஸ்தானுக்கு தப்பிச் செல்வதற்கு முன்பு பஞ்சாபில் உள்ள குருநானக்தேவ் பல்கலைக்கழகத்தில் மதக்கல்விக்கான காலாநிதி பட்டப்படிப்பில் அங்கத்தவராக இருந்ததால் அவரை அவரது கூட்டாளிகள் 'பி.எச்.டி' என்று அழைத்தனர்.

பஞ்சாப் முழுவதும் பல கொலைகள், எல்லை தாண்டிய போதைப்பொருள் ஒப்பந்தங்கள் மற்றும் கையெறி குண்டுத் தாக்குதல்களில் ஹர்மீத்தின் பெயர் உள்ளது. இதில் அமிர்தசரஸின் ராஜசான்சி மத சபை மீதான தாக்குதலில் மூவரைக் கொலை செய்தமைக்கு எதிராக இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பும் அவருக்கு எதிராக உள்ளது.

2008 ஆம் ஆண்டில் பஞ்சாப் பொலிஸார், ஹர்மீத் சிங் மீது பஞ்சாபில் காலிஸ்தானி அமைப்பை இயக்கியதற்காக முதல் முறையாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருந்தனர். அவரது திட்டத்தை பொலிஸார் முறியடித்து, ஏ.கே.துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள், 900 தோட்டாக்கள், 35,000 டொலர்கள் போலி நாணயம் மற்றும் 25கிலோ ஹெரோயின் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

கனடா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளான இங்கிலாந்து, ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளிலிருந்து ஹர்மீத் நிதியைப் பெறுவது பொலிஸாரின் விசாரணையில் கண்டறியப்பட்டது. காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கும் காலிஸ்தானி குழுக்களுக்கும் இடையில் ஐ.எஸ்.ஐ.யின் பாலமாக ஹர்மீத் செயற்பட்டிருந்தமையும் உறுதிப்படுத்தப்பட்டது. 

ஐ.எஸ்.ஐ.யின் மூலோபாயம் பஞ்சாபை மற்றொரு காஷ்மீராக மாற்றுவதாகும், இந்துக்கள் வெளியேற்றப்பட்டனர். இந்தியாவில் பெரும்பான்மையான மக்களால் இந்து மதம் பின்பற்றப்படுகின்றது.  இந்துக்கள் இந்திய மாநிலமான பஞ்சாபிலிருந்து வெளியேற்றப்பட்டால், பாக்கிஸ்தானிய நிறுவனங்கள் காஷ்மீரில் செய்ததைப் போலவே, அந்த மாநிலத்திலும் ஒரு பிடியைப் பெற முடியும் என்பது இலக்காக உள்ளது. 1980களின் பிற்பகுதியில் இனரீதியாக ஒரே மாதிரியான மாநிலமாக பஞ்சாம் மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52