தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதி மக்களுக்கு 5 ஆயிரம் பெறுமதியான நிவாரணப் பொதி

Published By: Digital Desk 3

14 May, 2021 | 04:45 PM
image

(இராஜதுரை ஹஷான்)

கொவிட் - வைரஸ் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள  குடும்பங்கங்களுக்கும், முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் சதொச விற்பனை நிலையம் ஊடாக 5,000 ஆயிரம் பெறுமதியான நிவாரணப் பொதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தினை கருத்திற் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட நிலையில்  பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளன.

பொது மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக  நடமாடும் சேவையின் பிரகாரம்  விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கொவிட் தாக்கத்தினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கும்,  முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கும் சதொச விற்பனை நிலையத்தின் ஊடாக 5,000 ஆயிரம் பெறுமதியான 20 அத்தியாவசிய பொருட்களை  வழங்க சதொச நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை அரிசி 10 கிலோ கிராம்,சிவப்பு அரிசி 5 கிலோகிராம், கோதுமை மா 3 கிலோ கிராம், உருளை கிழங்கு 3 கிலோ கிராம்,சிவப்பு பருப்பு 2 கிலோ கிராம்,வெள்ளை சீனி 1 கிலோ கிராம்,

சிவப்பு சீனி 1 கிலோகிராம், நெத்தலி 500 கிராம், பெரிய வெங்காயம் 3 கிலோகிராம், தேயிலை தூள் 200 கிராம், காய்ந்த மிளகாய் 100 கிராம், உப்பு 1 கிலோகிராம் பக்கற், மிளகாய் தூள் 200 கிராம், சோய  மீட் 2 பக்கற், நூடில்ஸ் 1 கிலோகிராம் பக்கற் 1,  500 கிராம் கிறீம் கிரகர் பிஸ்கட் பக்கற், மாரி பிஸ்கட் , முக்கவசம் 10, 100 மி.லீ கிருமி நீக்கி திரவம் ஆகிய பொருட்கள் நிவாரணப் பொதியில் உள்ளடங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08