அசாத் சாலியின் உடல் நிலை பாதிப்பு ஆபத்து நேர்ந்தால் சி.ஐ.டி.யே. பொறுப்பு; சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா

Published By: Digital Desk 3

14 May, 2021 | 01:49 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் உடல் நிலை பாதிக்கப்பட்டுளதாகவும் , தடுப்புக் காவலில் உள்ள அவருக்கு உடனடியாக உரிய சிகிச்சைகள் வழங்க்கப்படாது ஏதும் பாதிப்புக்கள் எற்படுமாக இருப்பின் அதற்கு சி.ஐ.டி.யினரே பொறுப்புக் கூற வேண்டும் என  அவரது சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா அறிவித்துள்ளார்.

சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க, பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஹான் பிரேமரத்ன மற்றும் பொறுப்பதிகாரி ஜயந்த பயாகல ஆகியோருக்கு விஷேட கடிதம் ஊடாக சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இதனை அறிவித்துள்ளார்.

தடுப்புக் காவலில் உள்ள அசாத் சாலியின், மனைவியின் அறிவுறுத்தலுக்கு அமைய, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இந்த கடிதத்தை அனுப்பி வித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது  கைது மற்றும் தடுத்து வைப்புக்கு எதிராக உயர் நீதிமன்றில் கடந்த எப்ரல் 5 ஆம் திகதி அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  அசாத் சாலி சார்பில், தன்னையே மனுதாரராக பெயரிட்டு, சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி சங்கரி தவராசா இம்மனுவை தாக்கல் செய்திருந்தார்.

சட்ட மா அதிபர், பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, சி.ஐ.டி. பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸா ( முன்னாள்), சி.ஐ.டி.யின் விஷேட விசாரணைப் பிரிவு இலக்கம் - 1 இன் பொறுப்பதிகாரி  பிரதான பொலிஸ் பரிசோதகர் ஜயந்த பயாகல, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,  குறித்த அமைச்சின் செயலர்  ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரால் ஜகத் அல்விஸ் ஆகியோர் இம்மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

குறித்த மனுவில் முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத்  சாலி 2021ம் ஆண்டு மார்ச் மாதம் 16ம் திகதி நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் வண்ணமும் இனங்களுக்கிடையே முரண்பாடுகளை  ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டதன் மூலம் தண்டணைச் சட்டக்கோவையின்  120  ஆம் அத்தியாயம் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 2ம் பிரிவின் கீழும் குற்றம் ஒன்றினை புரிந்துள்ளதாக கூறி குற்ற புலனாய்வுப் திணைக்களத்தினரால்  கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறான  பின்னணியில் மேலதிக விசாரணைக்காக குற்ற புலனாய்வு திணைக்களத்தினர்  2021ம் ஆண்டு மார்ச் மாதம் 19ம் திகதி பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதியிடம்  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 9(1) பிரிவின் கீழ்  தடுப்புக் காவல் உத்தரவைப் பெற்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில்  அசாத் சாலியை தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாகவும்  மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது  

எவ்வாறாயினும் இந்த கைதும் தடுத்து வைப்பும் அரசியல் அமைப்பின் 12(1) உறுப்புரை பிரகாரம் சட்டத்தின் முன்னர் அனைவரும் சமன் எனும் உறுப்புரையை மீறுவதாக அமைந்துள்ளதாக மனுதாரர்  தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,  12(2)  உறுப்புரையின் பிரகாரம்,  இன, மத , மொழி,  சாதி, பால்,  அரசியல் கொள்கை, பிறந்த இடம் உள்ளிட்ட எந்த காரணியையும் அடிப்படையாகக் கொண்டும் பாகுபாடு காட்டப்படலாகாது எனும்  விடயமும் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார். 

இதனைவிட அரசியலமைப்பின்  13(1) , 13(2)   ஆம் உறுப்புரைகளில் கூறப்பட்டுள்ள சட்டத்தினால் தாபிக்கப்பட்ட நடைமுறைக்கு மாற்றமாக ஒருவர் கைது செய்யப்படல் கூடாது, கைது செய்யப்படும் போது அவர் கைது செய்யப்படுவதற்கான காரணம் அவருக்கு கூறப்படல் வேண்டும் மற்றும்  கைது செய்யப்படும் நபர் அண்மையில் உள்ள நீதிமன்றில் ஆஜர் செய்யப்படல் வேண்டும் போன்ற விடயங்களை மீறுவதா அசாத் சலையின் கைதும் தடுத்து வைப்பும் அமைந்துள்ளதாக அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பின் 14(1) ஆம் உறுப்புரையூடக வழங்கப்பட்டுள்ள, கருத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அம்மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு அரசியலமைப்பின்  உறுப்புரைகளை மீறுவதாக   அசாத் சாலியின் கைது அமைந்துள்ள நிலையில், பாதுகாப்பு அமைச்சரின் தடுப்புக் காவல் உத்தரவு சட்டவலுவற்றதென தீர்ப்பரிவிக்குமாறும்     இடை க்கால தடை உத்தரவு வழங்கி கைதியான அசாத் சாலியை விடுதலை செய்யும்படியும்  இம்மனு ஊடாக கோரப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியிலேயே குறித்த மனுவின் பிரதிவாதிகள் மூவருக்கு, அசாத் சாலிக்கு உரிய சிகிச்சையளிக்காது அவருக்கு ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் சி.ஐ.டி.யே பொறுப்புக் கூற வேண்டும் என்ற  அவசர கடிதம் அனுப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51