வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்து ஐவர் காயம்

Published By: Vishnu

14 May, 2021 | 01:25 PM
image

கினிகத்தேனை பகுதியில் நேற்றிரவு பெய்த பலத்த மழைக் காரணமாக பொல்பிட்டிய மாதெனியாவத்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அங்குள்ள வீடொன்றின் மீது மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய் மற்றும் அவரது மகள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று அதிகாலை  12.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மண்ணுக்குள் புதையுண்டவர்களை பிரதேச மக்களும், லக்ஸ்ஸபான இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவத்தினரும் மீட்டுள்ளனர்.

இதன்போது பலத்த காயமடைந்த மகளும், தாயும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பத்தில் வீட்டின் படுக்கையறை பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இதேவேளை, மத்திய மலை நாட்டின் சில பிரதேசங்களில் நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக நோர்ட்டன் பீரிஜ், விமலசுரேந்திரா நீர்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.

அதேபோல் தொடர்ந்தும் மழை பெய்யுமானால் நீர்தேக்கத்தின் ஏனைய வான்கதவுகளும் திறக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளளளது.

மேலும் லக்ஸப்பான நீர்தேக்கத்தை அண்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் மழை நீடித்தால் அந்த நீர் தேக்கத்தின் வான் கதவுகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளளது.

இதேவேளை, தொடர்ந்தும் மழை பெய்தால் மலைப்பாங்கான பகுதிகளில் மண் சரிவு ஏற்படகூடும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06