இன்றிலிருந்து  கடைகளை திறக்க அனுமதியில்லை அடையாள அட்டை முறைமையும் செல்லுபடியாகாது - அஜித் ரோஹண

Published By: Digital Desk 3

14 May, 2021 | 08:45 AM
image

(செ.தேன்மொழி)

முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் , மருந்தகங்கள் தவிர்ந்த (பாமசி) வேறு எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

அத்தோடு தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வெளியில் செல்லும் நடைமுறை இந்த தினங்களுக்கு , அதாவது இன்றிலிருந்து எதிர்வரும் 17 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 4 மணிவரையில் செல்லுபடியாகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில் செயற்படும் விதம் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவின்மை காணப்பட்டது. எனவே இது தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெளிவுபடுத்துகையில் ,

நாடளாவிய ரீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணிமுதல் , எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரையில் முழு நேர போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இன்று வெள்ளிக்கிழமை , நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் முழுமையான போக்குவரத்து கட்டுபாடு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த 3 நாட்களும் வைத்தியசாலைகள் மற்றும் மருந்தகங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்படும். அதே போன்று அத்தியாவசிய சேவைகளுக்கும் அனுமதி வழங்கப்படும். இவற்றை தவிர்த்து வேறு எந்தவொரு காரணிகளுக்காகவும் எந்தவொரு நபருக்கும் வெளியில் நடமாடுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது.

இதன்போது மருந்தகங்கள் தவிர்ந்த (பாமசி) வேறு எந்தவொரு வர்த்தக நிலையத்தையும் திறப்பதற்கு அனுமதிவழங்கப்பட மாட்டாது. ஒளடதங்களை  விநியோகிப்பதற்கு முடியும். எனினும் இந்த காலப்பகுதியில் தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமைய செல்வதற்கும் அனுமதிவழங்கப்பட மாட்டாது.

எதிர்வரும் திங்கட்கிழமை அதிகாலை 4 மணியின் பின்னரே அடையாள அட்டையின் இறுதி இலக்கத்திற்கமைய செல்வதற்கான அனுமதி வழங்கப்படும். அதனால் முழுமையான போக்குவரத்து கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அனைவரையும் தங்களது வீடுகளிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04