கொரோனா வைரஸை அழிக்கும் முகக்கவசம்: இந்திய மாணவி கண்டுபிடிப்பு

Published By: Gayathri

13 May, 2021 | 12:51 PM
image

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் கொரோனா வைரஸை அழிக்கும் முகக்கவசத்தை கண்டுப்பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. 

இதுவரை உலக நாடுகளில் 16 கோடிக்கும் மேற்பட்டவர்களை பாதித்து, தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நோயாக கொரோனா வைரஸ் தொற்று இருந்து வருகிறது. 

இந்த தொற்றிலிருந்து பாதுகாக்க மருத்துவ விஞ்ஞானிகள் தடுப்பூசிகளை கண்டறிந்து, அதனை மக்களின் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.  

அத்துடன் வேறு வகையான பாதுகாக்கும் முறைகள் குறித்தும் விரிவாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் முகக்கவசம் ஒன்றை வடிவமைத்து இருப்பதாக இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த மாணவி திகந்திகா போஸ் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது...

' கொரோனா வைரஸ் கிருமியை அழிக்கும் முக கவசத்தை கண்டுபிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டேன். 

மூன்றடுக்கு முக கவசம் ஒன்றை வடிவமைத்தேன். முதல் அடுக்கில் தூசியை வடிகட்டும் மின்காந்த அணுக்கள் உள்ளன. அதனை கடந்து இரண்டாவது அடுக்கின் வழியே காற்று மூன்றாவது அடுக்கிற்குள் செல்லும்போது அங்குள்ள சோப்பு கரைசல் கொரோனா வைரஸ் கிருமிகளை அழித்து, தூய்மையான காற்றை சுவாசிக்க வழிவகை செய்கிறது. 

இயல்பாகவே சோப்பு கரைசலுக்கு கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளதை அனைவரும் அறிவர். கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டவரிடமிருந்து வைரஸ், மற்றவர்களுக்கும் பரவாமல் காக்கும் இந்த முக கவசத்திற்கு காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளேன்' என்றார்.

இவர் கண்டுபிடித்த முகக்கவசம் தற்போது ஆய்வு நிலையில் இருப்பதாகவும் விரைவில் பாதுகாப்பு அம்சங்கள் உறுதிப்படுத்தப்பட்டு, மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் கண்டறிந்திருக்கும் வைரஸ் அழிப்பு முகக்கவசம் மும்பையில் உள்ள கூகுள் அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29