தன்னை தற்காத்துக் கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை உண்டு - ஜோ பைடன்

Published By: Vishnu

13 May, 2021 | 09:57 AM
image

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான ஒரு தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனியர்களுக்கும் இடையிலான வன்முறைச் சம்பவங்கள் விரைவில் முடிவடையும் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.

"எனது எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் இந்த வன்முறை விரைவில் முடிவடைய வேண்டும் என்பது, ஆனால் கசா வன்முறை அதிகரிக்கும் போது இஸ்ரேலுக்கு தன்னை தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு" என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

பைடன் வன்முறைச் சம்பவங்கள் நிறைவடையும் என்ற அவரது நம்பிக்கையின் பின்னணியில் உள்ள காரணங்களை இதன்போது விளக்கவில்லை.

தனது தேசிய பாதுகாப்புக் குழு இஸ்ரேல், எகிப்து, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ளவர்களுடன் அடிக்கடி தொடர்புகொண்டு மோதலுக்குத் தீர்வு காண முயற்சிப்பதாக அவர் கூறினார்.

ஹமாஸ் ஆட்சி செய்யும் காசா பகுதியில் இஸ்ரேலிய இராணுவம் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே கடுமையான மோதல்கள் 2014 யுத்தத்தின் பின்னர் இப்பகுதியை குழப்புவதற்கான மிகக் கடுமையான போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு ஒருங்கிணைந்த இராஜதந்திர உந்துதலைத் தூண்டியுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47