2020 இல் வரவேற்க காத்திருக்கிறது டோக்கியோ

Published By: Raam

23 Aug, 2016 | 11:09 AM
image

ரியோ 2016 ஒலிம்பிக் விளை­யாட்டு விழா கொண்­டாட்­டங்கள் மிகுந்த முடிவு விழா­வு­டனும் 2020 ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவை நடத்­த­வுள்ள டோக்­கி­யோ­வுக்கு ஒலிம்பிக் கொடியை கைய­ளிக்கும் வைப­வத்­து­டனும் நிறை­வுக்கு வந்­தது.

ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவை வெற்­றி­க­ர­மாக நடத்திய பெரு­மை­யுடன் ஏற்­பாட்­டா­ளர்­களும் ரியோ மக்­களும் ஆனந்தக் கண்ணீர் விட, இயற்கை அன்­னையும் இறுதி நாளன்று மழை பொழியச் செய்து ஆசியை வழங்­கினார்.

மூன்று மணி நேரம் நீடித்த முடிவு விழா வைபவம் ஈர­லிப்பு மிகுந்த மரக்­கானா விளை­யாட்­ட­ரங்கில் பிரேஸில் கலா­சா­ரங்­களை பிர­தி­ப­லிக்கும் கண்­கவர் நிகழ்ச்­சி­க­ளுடன் நடை­பெற்­றது.

பிரே­ஸிலில் மிகவும் பிர­சித்தி பெற்ற வீதி கொண்­டாட்ட விழா­வான கொர­டாவோ டா போலா ப்ரெட்டா நிகழ்ச்சி அரங்கில் குழு­மி­யி­ருந்த சுமார் 80,000 ர­சி­கர்­களைப் பர­வ­சத்தில் ஆழ்த்­தி­யது.

இன்னும் நான்கு வரு­டங்­களில் 32ஆவது ஒலிம்பிக் அத்­தி­யா­யத்தை அரங்­கேற்­ற­வுள்ள டோக்­கியோ நகர் தொடர்­பான அறி­முக நிகழ்வு டோக்­கியோ டைம் ஜஸ்ட் என்ற தொனிப்­பொ­ருளில் நடத்­தப்­பட்­டது.

முடிவு விழா­வுக்கு முந்­திய தினத்­தன்று செய்­தி­யா­ளர்கள் மத்­தியில் பேசிய சர்­வ­தேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச், ஒலிம்பிக் விளை­யாட்டு விழாவை மக்­களின் விளை­யாட்டு விழா, மிகவும் மகிழ்ச்­சி­க­ர­மான விளை­யாட்டு விழா, மிகவும் அழ­கான விளை­யாட்டு விழா, உணர்ச்­சி­க­ர­மான விளை­யாட்டு விழா என எல்­லோரும் புகழ்ந்­து­விட்­டனர். நான் எனது முடிவு விழா உரையில் புதிய வார்த்தை ஒன்றைப் பிர­யோ­கிக்கத் தேட வேண்­டி­யுள்­ளது என்றார்.

அதற்கு அமைய வியத்­தகு நகரில் வியத்­தகு ஒலிம்பிக் விழா என முடிவு விழாவில் தோமஸ் பெச் குறிப்­பிட்டார்.

அங்கு தொடர்ந்து பேசிய அவர், மிகவும் கடி­ன­மான சூழ்­நி­லையில் கடந்த 16 தினங்­க­ளாக (போட்­டிகள் நடை­பெற்ற தினங்­களின் எண்­ணிக்கை) ஐக்­கிய பிரேசில் முழு உல­கையும் உற்­சா­கத்தில் மிதக்க வைத்­தது என்றார்.

முடிவு விழாவில் கணினி விளை­யாட்டுப் பொம்மை சுப்பர் மரி­யொவின் ரூபத்தில் ஜப்பான் பிர­தமர் ஷின்சோ அபேயின் உருவம் காட்­சிப்­ப­டுத்­தப்­பட்­ட­போது முழு அரங்­கமே கர­கோஷம் எழுப்பி ஆர­வாரம் செய்­தது.

அத்­துடன் உலக அதி­ச­யங்­களில் ஒன்­றான மீட்பர் கிறிஸ்­துவின் தோற்றம், கரும்பு மலை என்­பவற்றை எடுத்­துக்­காட்டும் நிகழ்­வு­களும் இடம்­பெற்­றன.

முடிவு விழா வைப­வத்­தின்­போது ஒலிம்பிக் கொடி, டோக்­கியோ ஆளுநர் யூரிக்கோ கொய்க்­கே­யிடம் ரியோ மாந­கர பிதா எடு­வார்டோ பாய­ஸினால் வைப­வ­ரீ­தி­யாக கைய­ளிக்­கப்­பட்­டது.

ரியோ 2016 - ஒப்­ரி­காடோ (நன்றி), டோக்­கியோ 2020 - யொக்­கோசோ (நல்­வ­ரவு). விழா முடிவில் வாணவேடிக்கை மரக்கானா அரங்கையும் அதன் சுற்றுச் சூழலையும் பிரகாசிக்கச் செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35