தலைமைத்துவ பயிற்சி நிலையத்தில் ; 9 மாணவர்கள் துஷ்பிரயோகம் ; சந்தேக நபர்கர்களுக்கு பிணை

Published By: Raam

23 Aug, 2016 | 08:38 AM
image

(வத்துகாமம் நிருபர்)

கண்டி, ஹந்தானைப் பகுதியில் தலைமைத்துவ பயிற்சி நிலையம் என்ற பெயரில் இயங்கிய ஒரு நிறுவனத்தின் பாலியல் முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டிருந்தவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் நால்வர் 15,16,17 வயதுடைய 9 மாணவர்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாகச் சந்தேகத்தில் கைதாகி விளக்க மறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். 

நான்கு சந்தேக நபர்கர்களும் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பிணையில் விடுதலையில் செய்யப்பட்டுள்ள நால்வருக்கும் வெளிநாடுகளுக்குச் செல்ல நீதிமன்றம் தடைவிதித்துள்ளதுடன் அவர்களினது கடவுச் சீட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும் பாதிக்கப்பட்டுள்ள குறித்த மாணவிகளை அச்சுறுத்துவதோ அல்லது வேறேதும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுத்த முயன்றாலோ உடன் கைது செய்யும்படி பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கண்டி பிரதான நீதவான் புத்திக்க ஸ்ரீ ராகல முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கோள்ளப்பட்ட போதே மேற்படி சந்தேக நபர்களுக்கு அவர் பிணை வழங்கினார்.

பிரதான சந்தேக நபரான சந்திமால் கமகே என்பவருக்கு 25 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையும் ஐந்து இலட்ச ரூபாய் கொண்ட இரண்டு சரீரப்பிணையும்,இரண்டாம் மற்றும் மூன்றாம் சந்தேக நபர்களான இமேசா குமாரி விக்ரம சிங்க மற்றும் நுவன் வீரசிங்க ஆகிய இருவருக்கும் தலா 2 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீரப்பிணையும், நான்காவது சந்தேக நபரான நிமல் நிசாந்த பீரிஸ் என்பவருக்கு 10 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையும் ஐந்து இலட்ச ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையும் வழங்கப்பட்டது.

அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 10ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34