மாவட்ட மட்டத்தில் தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையங்களை இருமடங்காக அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானம்

Published By: Digital Desk 3

11 May, 2021 | 12:05 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் காணப்படுகின்ற கொவிட் தீவிர நிலையை கவனத்தில் கொண்டு மாவட்ட மட்டத்தில் இயங்கிவரும் தடுப்பூசி வழங்கும் நிலையங்களை இரு மடங்காக அதிகரிக்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. அத்தோடு அபாயம் அதிகமாகக் காணப்படும் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமையளிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொவிட் வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளமையால் , அதனைக் கட்டுப்படுத்துவதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடைமுறைகள் மற்றும் கடுமையான தீர்மானங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கொவிட் கட்டுப்பாட்டு செயற்திறன் மீளாய்வு குழு நேற்று திங்கட்கிழமை சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தலைமையில் சுகாதார அமைச்சில் கூடியது. இதன் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் இராஜாங்க அமைச்சர்களாக சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, சன்ன ஜயசுமன, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன , மருத்துவ நிர்வாகிகள், நிர்வாக சேவை அதிகாரிகள் மற்றும் விசேட வைத்திய நிபுணர்கள் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் வருமாறு,

இதன் போது, கொழும்பு , களுத்துறை, கம்பஹா உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முன்னிரிமையளித்தும், அதேவேளை ஏனைய மாவட்டங்களிலும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி பிரதேசங்களில் தற்போது இயங்கிவரும் தடுப்பூசி வழங்கும் மத்திய நிலையங்களின் எண்ணிக்கையை இரு மடங்காக அதிகரிக்கவும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட மட்டத்தில் இரசாயன ஆய்வுகூடங்களை அதிகரிப்பதன் மூலம் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

குறிப்பாக இதுவரையில் பி.சி.ஆர். பரிசோதனைக்கான பெற்றுக் கொள்ளப்பட்ட மாதிரிகளின் முடிவுகளை துரிதமாக வெளியிடுவதற்கான நடவடிக்கையை முன்னெடுப்பது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்தோடு பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்பட்டுள்ள நபர்கள் முடிவுகள் கிடைக்கப் பெறும் வரை வீடுகளிலிருந்து வெளியில் செல்வதை தடுப்பதற்கான நடவடிக்கை தொடர்பிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

தற்போது செயற்பட்டு வருகின்ற கொவிட் சிகிச்சை நிலையங்களுக்கு தேவையான ஒட்சிசன் உள்ளிட்ட ஏனைய மருத்துவ தேவைகளை மேலதிகமாக துரிதமாக பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

மாவட்ட ரீதியில் பி.சி.ஆர். பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதற்கு தேவையான நிதி கொவிட் கட்டுப்பாட்டுக்கான நிதியிலிருந்து ஒதுக்கப்படும் என்று தெரிவித்த அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி , இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:26:34
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34