நேற்றைய அமைச்சரவைக் கூட்ட தீர்மானங்களின் முழு விபரம்

Published By: Vishnu

11 May, 2021 | 11:19 AM
image

2021.05.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

01. இரண்டாவது ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தின் மூன்றாம் கட்டத்தை நடைமுறைப்படுத்தல்

இரண்டாவது ஒன்றிணைந்த வீதிப்புனரமைப்பு முதலீட்டு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 900 அமெரிக்க டொலர்களை ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கத்திற்கும் குறித்த வங்கிக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் வடக்கு, கிழக்கு, ஊவா மற்றும் மேல் மாகாணங்களில் 3,400 கிலோமீற்றர்கள் கிராமியப் பாதைகளை புனரமைத்து பராமரிப்பதற்கும், குறித்த மாகாணங்களிலுள்ள கிராமிய சமூகம் மற்றும் சமூகப் பொருளாதார மத்திய நிலையத்திற்கும் இடையே காணப்படும் 340 கிலோமீற்றர் தேசியமட்ட வீதிகளைப் புனரமைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டம் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, இரண்டாம் வீதிப்புனரமைப்பு முதலீட்டு வேலைத்திட்டத்திற்கு நிதியிடலுக்காக உடன்பட்டுள்ள 900 அமெரிக்க டொலர் தொகையில் 200 டொலர்களை மூன்றாம் தவணை நிதியாக ஆசிய அபிவிருத்தியிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கும், அதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு நிதி அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை பாதுகாத்தலும் பேண்தகு வகையில் பயன்படுத்தலும்

நீர்கொழும்பு களப்பு மற்றும் சதுப்பு நில வலயம் 6,232 ஹெக்டயர் பரப்பளவில் முத்துராஜவெல சுற்றாடல் தொகுதி அமைந்துள்ளது. குறித்த பிரதேசத்தில் சுற்றாடலை பேண்தகு வகையில் பயன்படுத்தி நகரக் குடியிருப்பாளர்களின் சமூகப் பொருளாதார நலனோம்புகைகளை மேற்கொண்டு செல்வதற்கு பெரும் பங்கு வகிக்கின்றது. இச்சதுப்பு வலயத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 1991 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் பாரிய கொழும்பு பொருளாதார ஆணைக்குழுவும் இணைந்து தயாரித்த பிரதான திட்டத்தின் (Master Plan) மூலம் பாதுகாப்பு வலயம், தாங்கு மண்டல வலயம், கலப்பு நகர வலயம் என மூன்று முக்கிய காணிப் பயன்பாட்டு முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் குறித்த வலயத்தின் 1,285.45 ஹெக்ரயார் நிலப்பரப்பு வன சீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு திணைக்களத்தால் முத்துராஜவெல சரணாலயம் எனவும், மேலும் 162.1 ஹெக்ரயார் நிலப்பரப்பு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் சுற்றாடல் பாதுகாப்புப் பிரதேசமாகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் அத்துமீறிய காணி நிரப்பல், சதுப்பு நிலப்பகுதியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு உட்கட்டமைப்புக் கட்டுமானங்கள், பல்வேறு செயற்பாடுகளுக்காக காணிகளைக் கையகப்படுத்தல், சட்டவிரோதமாக காணிகளைப் பிடித்தல், குப்பைகள் கழிவுகளை அகற்றல் போன்ற காரணங்களால் சுற்றாடல் தொகுதி அழிவடையும் ஆபத்துக்கு உள்ளாகி இருக்கின்றது. அதனால், குறித்த சதுப்பு நில வலயத்தின் நிலைபேற்றுக்கும் அதனை பேண்தகு விதத்தில் பயன்படுத்துவதற்கும் கீழ்வரும் நடவடிக்கைகளுக்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக கௌரவ பிரதமர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தின் பாதுகாப்பு மற்றும் பேண்தகு விதத்திலான பயன்பாட்டுக்காக சமகாலத்திற்குப் பொருத்தமான வகையில் பிரதான திட்டத்தை (Master Plan) துரிதமாகத் தயாரித்தல்.
  • அதற்காக ஏற்புடைய பங்குதார நிறுவனங்களின் தலைவர்கள்/பிரதிநிதிகள் அடங்கிய நடவடிக்கை குழு மற்றும் செயற்பாட்டுக் குழுவொன்றை நியமித்தல்.
  • நடவடிக்கைக் குழுவின் பரிந்துரைகளுக்கமைய உகந்த பாதுகாப்பு பொறிமுறையை செயற்படுத்துவதற்காக அரச/தனியார் காணிகளை நகர அபிவிருத்தி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய கையகப்படுத்தல்
  • தாழ்நிலப் பிரதேசமாக குறித்த சுற்றாடல் தொகுதியை பேண்தகு விதத்திலான பயன்பாட்டுக்காக குறித்த ஏற்புடைய நடவடிக்கைகளுக்கான பொறுப்பை இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு ஒப்படைத்தல்
  • பிரதான திட்டத்தின் (Master Plan) கீழ் அடையாளங் காணப்படும் தேசிய பாதுகாப்பு வனமாக்கப்பட வேண்டிய பிரதேசமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் சட்டத்தின் கீழ் தேசிய வனமாக பிரகடனப்படுத்தல்.
  • நடவடிக்கைக் குழு தயாரிக்கின்ற பிரதான திட்டத்தை நடைமுறைப்படுத்தி முத்துராஜவெல சதுப்பு நில வலயத்தை றம்சா (RAMSAR) ஈரநில வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்

03. கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மலேசியாவின் ரேய்லர்ஸ் பல்கலைக்கழகமும் (Taylor’s University) இணைந்து ஆராய்ச்சிக் கருத்திட்டம் நடாத்துவதற்காக ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உணவு மற்றும் பானங்கள் தொடர்பாக தொலைக்காட்சி விளம்பரங்களின் அதிகரிப்பு மற்றும் போக்குகள் தொடர்பாக 09 ஆசிய நாடுகளில் பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளை ஈடுபடுத்தி ஆராய்ச்சிக் கருத்திட்டமொன்றை நடைமுறை;படுத்துவதற்காக கொழும்பு பல்கலைக் கழகம் மற்றும் மலேசியாவின் ரேலர்ஸ் பல்கலைக்கழகமும் உடன்பாடொன்றை எட்டியுள்ளது. குறித்த ஆராய்ச்சி கருத்திட்டத்திற்காக கனடா சர்வதேச அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையம் மலேசியாவின் ரேய்லர்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நிதியனுசரணை வழங்குகின்றது. அதற்கமைய, கொழும்பு பல்கலைக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளுக்குத் தேவையான நிதி மலேசியாவின் ரேலர்ஸ் பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும். அதற்கமைய, முன்மொழியப்பட்ட சுற்றாடல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடமும் ஜப்பான் ரியூகியூஸ் பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல உயிர்கோள ஆராய்ச்சி நிலையத்திற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

நிறுவனங்களுக்கு இடையிலான ஆராய்ச்சிகள், புத்தாக்க நிகழ்ச்சித்திட்டங்கள் அபிவிருத்தி, ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வசதியளித்தல் மற்றும் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்களுக்காக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பீடமும் ஜப்பான் ரியூகியூஸ் பல்கலைக்கழகத்தின் வெப்பமண்டல உயிர்கோள ஆராய்ச்சி நிலையத்திற்கும் (Tropical Biosphere Research Centre of Unibersity of Ryukyus Japan) இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. கொவிட் -19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கான சலுகைகளை வழங்கல்

கொவிட் -19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்காக அடையாளங் காணப்பட்ட சலுகைகளை 2021 மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை வழங்குவதற்காக அதற்கு முன்னர் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று நிலைமை தொடர்ந்து நீடிப்பதால் பயணிகள் பேருந்து சரியான வகையில் மேற்கொள்ளப்படாமையை கருத்தில் கொண்டு 2021 ஏப்ரல் 01 ஆம் திகதி தொடக்கம் 2021 செப்டெம்பர் 31 ஆம் திகதி வரை கீழ்வரும் சலுகைகள் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு வழங்குவதற்காக போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

  • வருடாந்த விலைமனுக் கோரல் கட்டணத்தின் 50% வீதத்தை மட்டும் அறவிடல்
  • அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணத்தின் 50ம% வீதத்தை மட்டும் அறவிடல்

06. இலங்கை மகாவலி அதிகாரசபையின் நிர்வாகத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் மேற்படை மண் (Top Soil) அகற்றல் கருத்திட்டம்

மகாவலி நீர்த்தேக்கங்களை அமைப்பதை பிரதான நோக்கமாக கொண்டுள்ளதுடன் அமைவதுடன், குடிநீர் வழங்கல், விவசாயத்திற்கு நீர் வழங்கல் மற்றும் மீள்பிறப்பாக்க எரிசக்தி உற்பத்தி போன்றவற்றுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் குறித்த நீர்த்தேக்கங்களில் மேற்படை மண் படிந்துள்ளமையினால் அவற்றின் கொள்ளளவு குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளது. அதனால் குறித்த நீர்த்தேக்கங்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் நோக்கங்களை அடைவதற்கு சிரமமாக உள்ளது. மேற்படை மண் அகற்றுவதற்கும் அதனை வகைப்பிரித்து பயன்பாட்டுக்கு உகந்த வகையில் தயாரிப்பதற்கான நிகழ்ச்சி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கமைய பொல்கொல்ல, விக்டோரியா, ரன்தெனிகல, ரன்டம்பே, கலாவாவி மற்றும் போவதென்ன நீர்த்தேக்கங்களின் குறித்த அனைத்து விடயங்களும் உள்ளடக்கியதான அளவை நடவடிக்கைகள் மற்றும் தரவுகளை பெற்றுக்கொண்டு அடிப்படை சாத்தியவள அறிக்கையை தயாரிப்பதற்காக உள்ளூரில் அல்லது சர்வதேச ரீதியான ஆலோசனை சேவையை பெற்றுக்கொள்வதற்கும் அதற்கமைய தயாரிக்கப்படும் சாத்தியவள அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு குறித்த நீர்த்தேக்கங்களில் மேற்படை மண் அகற்றுவதற்காக பொருத்தமான நிறுவனத்தை தெரிவுசெய்வதற்காக உள்ளூர் மற்றும சர்வதேச ரீதியான போட்டி விலைமனுக்கோரலை பெறுவதற்காக நீர்ப்பாசன அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. 1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 06 ஆம் திகதி அல்லது அதற்கு பின்னர் 50 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது அதற்கு அதிகமான முதலீட்டுடன் கூடிய எந்தவொரு கருத்திட்டத்துக்காகவும் எந்தவொரு பண்டத்திற்கும் குறித்த கருத்திட்டத்தின் வணிக நடவடிக்கைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் இறக்குமதி வரியிலிருந்து (CESS) விடுவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ஒருசில பாரிய கருத்திட்டங்கள் பூர்த்தி செய்வதற்கு முன்னர் கட்டம் கட்டமாக வணிக நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதால் அவ்வாறான கருத்திட்டங்களுக்கான இறக்குமதி வரியை (CESS) விடுவிப்பதற்குரிய ஏற்பாடுகள் வகுக்கப்படவில்லை. அதனால் அவ்வாறான கருத்திட்டங்களின் இறக்குமதி வரி விடுவிப்புக்கான ஏற்பாடுகளை வகுத்து 1979 ஆம் ஆண்டு 40 ஆம் இலக்க இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள 2219 / 36 ஆம் இலக்க 2021 மார்ச் 17 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தலின் அங்கீகாரத்தை பெறுவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு வணிக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

- அரசாங்க தகவல் திணைக்களம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50