கர்ப்பிணிகளுக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் பிரசவிக்கும் குழந்தைக்கும் தொற்று ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது - வைத்திய நிபுணர் சுதத் சமரவீர

Published By: Digital Desk 3

11 May, 2021 | 10:12 AM
image

(எம்.மனோசித்ரா)

கர்பிணிகளுக்கு தொற்று ஏற்படும் போது அவர்களுக்கு கொவிட் பாதிப்பு தீவிரமடைவதோடு , கர்ப்ப நிலையிலும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தொற்றுக்குள்ளான கர்பிணியொருவர் பிரசவிக்கும் குழந்தைக்கும் தொற்று ஏற்படக் கூடும்.

எனவே கர்ப்பிணிகளும் , கர்ப்பிணிகள் உள்ள வீட்டாரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று தொற்று நோயியல் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

முன்னரை விட தற்போது சிறுவர்களுக்கும் அதே போன்று கர்ப்பிணிகளுக்கும் அதிகளவில் தொற்று ஏற்படுகிறது. கர்ப்பிணிகளுக்கு தொற்று ஏற்படும் போது அவர்களுக்கு கொவிட் பாதிப்பு தீவிரமடைவதோடு, பிரசவத்திலும் சிக்கல் ஏற்படுகிறது. எனவே தொற்றுக்குள்ளான கர்ப்பிணியொருவர் பிரசவிக்கும் குழந்தைக்கும் தொற்று ஏற்படக் கூடும்.

எனவே கர்பிணிகளுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால் விரைவாக வைத்தியசாலைகளுக்குச் சென்று கொவிட் பரிசோதனைகளை முன்னெடுத்து தமக்கு தொற்று ஏற்பட்டுள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இதேவேளை கர்ப்பிணிகள் உள்ள வீடுகளில் வசிக்கும் ஏனையோரும் இவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டும்.

தற்போதுள்ள நிலைமைக்கமைய ஒரே நேரத்தில் முழு நாட்டிலும் போக்குவரத்து கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை கிடையாது.

தற்போதுள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும். எனினும் நாளாந்தம் நாம் இவ்விடயங்களை மீளாய்வு செய்கின்றோம். மீளாய்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த முறைமையை நாம் நடைமுறைப்படுத்துவோம்.

போக்குவரத்து கட்டுப்பாடுகளின் ஊடாக நபரொருவர் தான் வசிக்கும் பிரதேசத்திலிருந்து பிரிதொரு இடத்திற்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்பதையே எதிர்பார்க்கின்றோம். எனவே சட்டங்களை அமுல்படுத்தி சகல பிரதேசங்களையும் முடக்குவதை விட ஒவ்வொருவரும் உணர்ந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே பொறுத்தமானது.

நாட்டில் தற்போது கொவிட் தடுப்பூசி வழங்கும் செய்பாடுகள் திட்டமிடலுடன் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு தடுப்பூசியும் காலாவதியாகவில்லை.

எனவே மக்கள் அனைவரையும் அச்சமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம். எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டங்கள் வேகமாக முன்னெடுக்கப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29