3 மாத பெண் குழந்தை உட்பட 26 பேர் கொரோனாவுக்கு பலி ! அபாயகட்டத்தை நோக்கி நகரும் இலங்கை !

11 May, 2021 | 06:59 AM
image

நாட்டில் 2021 மே மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 10 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்று நோயாளர்களில் 26 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றையதினம்  (10) உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 827 ஆகும்.

இதேவேளை, இலங்கையில் நேற்றையதினம் மாத்திரம் 2624 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன் படி, 

01. காலி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே மாதம் 09 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02. ஹெட்டிபொல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 36 வயதுடைய ஆண் ஒருவர், லக்கல பிரதேச வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 10 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். உக்கிர கொவிட் நியூமோனியா மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. பல்லேவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 09 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

04. கண்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05. மத்துகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 80 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது 2021 மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

06. பாதுக்க பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், தேசிய தொற்று நோயியல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

07. நேபட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய ஆண் ஒருவர், மத்துகம பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 10 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08. யாழ்ப்பாணம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 91 வயதுடைய பெண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09. யாழ்ப்பாணம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 88 வயதுடைய ஆண் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் ஏற்பட்ட மோசமான நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. மீகஹகொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 71 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 09 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 73 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 03 ஆம் திகதியன்று களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

12. அக்குரஸ்ஸ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 45 வயதுடைய பெண் ஒருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் இருந்து கராப்பிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

13. மொரொன்துடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 04 ஆம் திகதியன்று களுத்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

14. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 10 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

15. அநுராதபுரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய பெண் ஒருவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் இருந்து கொவிட் 19 தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் வெலிகந்த கொவிட் சிகிச்சை நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த நிலையத்தில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

16. கொழும்பு 06 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 10 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

17. கலுஅக்கல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 10 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் 19 நுரையீரல் தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

18. மொரட்டுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 84 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, சிறுந Pரகத் தொற்று, ந Pரிழிவு, உயர் குருதியழுத்தம் மற்றும் குருதி நஞ்சானமை போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

19. மல்வான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 66 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமொனியா, இதயநோய், உயர் குருதியழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

20. பொரள்ளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 88 வயதுடைய பெண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். 2019 ஆம் ஆண்டில் முதுகென்பிலும் இடுப்பு என்பிலும் பாதிப்பு ஏற்பட்டமையால் ஏற்பட்ட படுக்கை நிலைமை மற்றும் கொவிட் நியூமொனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

21. கொழும்பு 15 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 83 வயதுடைய ஆண் ஒருவர், 2021 மே 08 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமொனியா மற்றும் மூளையில் குருதிக்கசிவால் ஏற்பட்ட படுக்கை நிலைமை, சிறுநீரக தொற்று மற்றும் குருதி நஞ்சானமை போன்ற நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

22. கந்தான பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய

வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது 2021 மே 08 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமொனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

23. மாஸ்வெல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 58 வயதுடைய பெண் ஒருவர், கம ;பளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமொனியாவுடன் ஏற்பட்ட மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

24. நேபொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 96 வயதுடைய பெண் ஒருவர், ஹொரன ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 மார்புத் தொற்றால் ஏற்பட்ட மோசமான நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

25. வத்தேகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட மூன்று மாத பெண் குழந்தையொருவர், கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமொனியாவுடன் பல உறுப்புக்கள் செயலிழந்தமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

26. மாலம்பே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 09 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமொனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07