இலங்கை கிரிக்கெட் குழாமில் புதுமுக வீரர்களுக்கு கொரோனா தொற்று

Published By: Gayathri

10 May, 2021 | 08:57 PM
image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கெதிரான சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை கிரிக்கெட் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட புதுமுக வீரர்கள் இருவருக்கு  கொவிட் 19 கொரோனா வைரஸ் தொற்றிருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, இலங்கை கிரிக்கெட் குழாமில் இணைத்துக்கொள்ளப்பட்ட தனஞ்சய லக்சான் மற்றும் இஷான் ஜயரட்ண ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதால், பங்களாதேஷ் அணியுடனான சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் பங்கேற்க முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவன வட்டாரம் தெரிவிக்கின்றது.

இவர்கள் இருவரும் சுகாதார ஆலோசனைகளுக்கு அமைவாக மருத்துவ சிகிச்சைகளை பெற்றுவருகின்றனர். 

எனினும், புதுமுக வீரரான ஷிரான் பெர்னாண்டோவுக்கு கொரோனா தொற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், பங்கேளாதேஷ் அணியுடனான இலங்கை கிரிக்கெட் குழாமில் பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, பங்களாதேஷ் பயணிக்கவுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கடந்த 8 ஆம் திகதியன்று ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளபோதிலும், ஷிரான் பெர்னாண்டோவுக்கு மேற்கூறிய தடுப்பூசி வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 

ஷிரான் பெர்னாண்டோ கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததன் பின்னர், அவருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவன வட்டாரம் தெரிவிக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31