தமிழக சட்டசபையின் எதிர்கட்சித் தலைவரானார் எடப்பாடி பழனிசாமி

Published By: Digital Desk 3

10 May, 2021 | 04:06 PM
image

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சி தலைவரை தெரிவு செய்ய 3 மணிநேரமாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவுபெற்றது.

கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த முதல் ஆலோசனை கூட்டத்தின்போது எந்த முடிவும் எட்டப்படாத நிலையில் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் மீண்டும் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகவல் முதன் முதலாக அதிமுக.,வின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17