விஷாலுடன் இணையும் நடிகை ரவீனா

Published By: Gayathri

10 May, 2021 | 12:25 PM
image

அறிமுக இயக்குனர் து. பா. சரவணன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் நடிகர் விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் நடிகை ரவீனா ரவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

'எனிமி' என்ற படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த 'புரட்சி தளபதி' விஷால் தற்போது அறிமுக இயக்குனர் து.‌பா சரவணன் இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். 

அண்மையில் பூஜையுடன் தொடங்கப்பட்ட இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை டிம்பிள் ஹயாதி நடிக்கிறார். 

இவர் ஏற்கனவே ஏ. எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த 'தேவி 2' படத்தின் மூலம் தமிழ் இரசிகர்களுக்கு அறிமுகமானவர். 

இப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை ரவீனா ரவி நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இவர் தமிழ்த் திரையுலகில் பின்னணி பேசும் கலைஞராக பணியாற்றி வருவதுடன், 'ஒரு கிடாயின் கருணை மனு', 'காவல்துறை உங்கள் நண்பன்' ஆகிய படங்களில் கதையின் நாயகியாக நடித்து நடிகையாகவும் பிரபலமானவர். 

இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனாத் தொற்று பரவாமல் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு நிறைவு பெற்றதும் நடைபெறும் என படக்குழுவினர் அறிவித்திருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37