கடந்த 24 மணிநேரத்தில் 351 பேர் கைது

Published By: Vishnu

10 May, 2021 | 09:46 AM
image

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக கடந்த 24 மணிநேரத்தில் 351 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் குறித்த குற்றச்சாட்டுக்காக 7,316 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

கொவிட்-19 பரவலை தடுக்க பொது மக்கள் இயலுமான வகையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். பொதுப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும்போது முகக் கவசம், சமூக இடைவெளி என்பவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை இன்றைய தினம் பஸ்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகனங்களை கண்காணிக்க சிறப்பு நடவடிக்கை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

பஸ்கள் மற்றும் ரயில்களில் இருக்கை திறனுக்கு ஏற்ப பயணிகளை கொண்டு செல்ல முடியும், அதே நேரத்தில் டாக்சிகள் மற்றும் முச்சக்கர வண்டிகளில் சாரதிகளுக்கு கூடுதலாக இருவருக்கு மாத்திரமே பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் பட்சத்தில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதிகளை கைதுசெய்யவும், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10