எரிபொருள் குழாய் இயக்குநரக சைபர் தாக்குதல் ; அவசரகால சட்டத்தை வெளியிட்ட அமெரிக்கா

Published By: Vishnu

10 May, 2021 | 09:27 AM
image

அமெரிக்காவின் மிகப்பெரிய எரிபொருள் குழாய் இயக்குநரகமான கொலோனியல் பைப்லைன் பணயத் தீநிரல் (Ransomwar) சம்பந்தப்பட்ட சைபர் தாக்குதலால் வெள்ளிக்கிழமை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை அவசரகால சட்டத்தை வெளியிட்டதுடன், செயலிழந்த குறித்த இயக்குநரகத்தின் சேவையை மீட்டெடுக்கவும் தொடர்ந்தும் போரடி வருகிறது.

நிறுவனம் டெக்சாஸிலிருந்து நியூ ஜெர்சி வரை 8,850 கி.மீ (5,500 மைல்) க்கும் அதிகமான நீளமுள்ள ஒரு குழாய் வலையமைப்பை இயக்குகிறது.

கொலோனியல் பைப்லைன் ஒரு நாளைக்கு 2.5 மில்லியன் பீப்பாய் பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை அதன் வலையமைப்பு முழுவதும் கொண்டு செல்கிறது.

மேலும் இது அமெரிக்க கிழக்கு கடற்கரை எரிபொருள் விநியோகத்தில் 45 சதவீதத்தை கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது.

இந் நிலையில் தற்சமயம் அமெரிக்காவில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால நிலை சட்டம் எரிபொருளை சாலை வழியாக கொண்டு செல்ல உதவுகிறது.

அதன்படி பெட்ரோல், டீசல், ஜெட் எரிபொருள் மற்றும் பிற சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்வதற்காக மொத்தம் 18 மாநிலங்களுக்கு தற்காலிக சேவை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலைமைகளினால் திங்களன்று எரிபொருள் விலை 2-3% உயரக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர், ஆனால் கொலோனியல் பைப்லைனின் செயலிழப்பை மீட்டெடுக்க அதிக நேரம் சென்றால் பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அமெரிக்க வர்த்தக செயலாளர் ஜினா ரைமொண்டோ, வொஷிங்டன் மேலும் கடுமையான எரிபொருள் விநியோக இடையூறுகளைத் தவிர்க்கவும், கொலோனியல் பைப்லைன் இயக்குநரகத்தின் சேவையை விரைவில் மறுதொடக்கம் செய்யவும் உதவுவதாகக் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

'Ransomware' என்பது தீநிரல்களில் ஒன்றாகும், இந்த நச்சுநிரலானது, முதன்முதலில் 2013 ஆம் ஆண்டு உருசியாவில் அதிகம் உணரப்பட்டது. அதன் பிறகு உலகெங்கும் உணரப்பட்டது. இது ஒரு கணினியின் கட்டகத்தை, தனது நிரல் வன்மையால், குறியீட்டுச்சொற்களாக, தகவல் மறைப்பு செய்து, பூட்டி விடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணுகலை மீண்டும் பெற கட்டணம் கோருகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10